இதழ் 75

மறக்கப்படுமா மன்னாரின் மட்பாண்ட கைத்தொழில்..?

மன்னார் மாவட்டத்தின் அடம்பன் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கறுக்காக்குளம் என்னும் கிராமத்தில்; தமிழரின் பாரம்பரிய கைத்தொழிலாக விளங்குகின்ற மட்பாண்ட உற்பத்தி கைத்தொழிலினை இரண்டாம் தலைமுறையாக மேற்க் கொண்டுவருகின்ற வெள்ளைச்சாமி மகாலிங்கம் என்பவருடனான நேர்காணல்.

கேள்வி: உங்களுடை பெயர் , வயது மற்றும் குறித்;த தொழிலை எத்தனை வருடங்களாக செய்துவருகின்றீர்கள்?

பதில்: எனது பெயர் வெள்ளைச்சாமி மகாலிங்கம், தற்போது எனக்கு 58 வயது, நான் கிட்டத்தட்ட 38 வருடங்களுக்கு மேலாக மண்பாண்ட உற்பத்தி கைத்தொழிலை மேற்க்கொண்டுவருகின்றேன்.

கேள்வி: நீங்கள் எவ்வாறான மட்பாண்ட பொருட்களை உற்பத்தி செய்கின்றீர்?

பதில்: அடுப்பு, சுட்டி, முட்டி, வீட்டிற்கு தேவையான சமையல் பாத்திரங்கள் மற்றும் பறவைகளுக்கான கூடுகள் போன்றவற்றை இங்கே உற்பத்தி செய்து வருகின்றேன்.

கேள்வி: எவ்வாறு இந்த கைத்தொழிலை பழக வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு எவ்வாறு ஏற்;ப்பட்டது?

பதில்: வீட்டில் எனது அப்பா சட்டி, பானை வனைவதனை பார்க்கும் போது எனக்கும் அதில் ஈடுபாடு ஏற்ப்பட்டது. இந்த ஆர்வம்தான் என்னை மட்பாண்ட கைத்தொழிலை பழக Àண்டியது.

கேள்வி: நீங்கள் எவ்வாறு மட்பாண்ட உற்பத்தி பொருட்களை செய்ய பழகினீர்கள்?

பதில்: ஆரம்பத்தில் அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்டேன். பின்னர் எனது 20 வயதில் ஒட்டிசுட்டானின் போய் இங்கே இருந்து சில வருடங்கள் இக்கைத்தொழிலை கற்றுக்கொண்டேன்;. அதன் பின்பு என்னால் தனியாக மட்பாண்டங்களை உற்பத்தி செய்து கொள்ள என்னால் முடிந்தது.

கேள்வி: இந்த தொழிலை பழகுவதற்கு விசேட திறமைகள் ஏதும் தேவையென நீங்கள் கருதுகின்றீர்களா?

பதில்: நிச்சயமாக. விசேட திறமை என்று சொல்வதனை விட, இத்த தொழிலை செய்வதற்கு மிக முக்கியமான விடயமாக பொறுமை வேண்டும். மண்ணை பதப்படுத்துவது, எமக்கு தேவையான பொருட்களை கற்பனையில் நினைத்து அவற்றை மட்பாண்டங்களாக வனைவது, சூளையிடுவது, அடுக்குவது விற்பனைக்காக காத்திருப்பது, இலாபத்திற்காக காத்திருத்தல் என எல்லாவற்றிக்கும் பொறுமை முக்கியமாக தேவைப்படுகின்றது.

கேள்வி: உங்களுடைய கைத்தொழிலுக்கு தேவையான மூலப்பொருளை எங்கிருந்து பெற்றுக்கொள்கின்றீர்கள்?

பதில்: மடுக்கரையில் இருந்து பெற்றுக்கொள்கின்றேன். வருடம் ஒன்றிற்கு 4 டிப்பர் மண் மாத்திரம் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி காணப்படுகின்றது.

கேள்வி: மன்னாரில் நீங்கள் மட்டுமா இந்த கைத்தொழில் ஈடுபட்டு வருகின்றீர்கள்?

பதில்: இல்லை. மன்னாரில் பலர் இவ்வுற்பத்தியில் ஈடுபட்டு வந்தார்கள். இருந்த போதிலும் மூலப்பொருள் பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களினால் மெல்ல மெல்ல குறைவடைந்து, தற்போது நானும் மடுக்கரையில் ஒருவரும் ஈடுபட்டுபட்டு வருகின்றோம். எங்களை விட யாரும் இக்கைத்தொழில் ஈடுபட்டு வருவதாக நான் அறியவில்லை.

கேள்வி: உங்களுடைய உற்பத்திப்பொருட்களை எங்கெல்லாம் விற்பனை செய்கின்றீர்கள்?

பதில்: மன்னார் , நொச்சியாகம , வவுனியா மற்றும் வருடத்தில் ஒன்றிரண்டு தடவைகளில் மட்டக்களப்பில் இருந்து வந்து மொத்தமாக மட்பாண்ட உற்பத்திப்பொருட்களை கொள்வனவு செய்து செல்வார்கள்.

கேள்வி: மழைக்காலங்களில் உங்களுடைய தொழில் எவ்வாறு முன்னெடுத்துச்செல்லப்படுகின்றது?

பதில்: மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு முதலே இரண்டு , மூன்று மாதங்களுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்து காயவைத்து, சூளையிட்டு அடுக்கிவிடுவோம.; மழைக்காலங்களில் நாங்கள் விவசாய நடவடிக்கைகளில்; ஈடுபடுவோம். மீண்டும் கோடை காலம் ஆரம்பமாக மட்பாண்ட உற்பத்தியில் ஈடுபடுவோம்.

கேள்வி: மட்பாண்ட உற்பத்தியின் படிநிலைகளை பற்றி கூறமுடியுமா?

பதில்: ஆம். தேவையானளவு மண்ணை தெரிவு செய்து அதனை தொட்டித்தண்ணீர் கரைத்து, வடிகட்டி, அதிலுள்ள குப்பைகள், கற்களை அகற்றி களித்தன்மையில் சிறிய சிறிய கட்டிகளாக முதலில் சேகரித்துக்கொள்ள வேண்டும். பின்னர் சக்கரத்தில் வைத்து எமக்கு தேவையான அளவில், தேவையான பாத்திரங்களை வனைந்து அவற்றை மெதுவாகத்தட்டி, பலப்படுத்தி, வர்ணம்éசி, காயவைத்துக்கொள்ள முடியும்.

அதன் பின்பு பாத்திரங்களை சூளையில் அடுக்கி தகுந்த விறகு மற்றும் வைக்கோல் கொண்டு மாறி மாறி சூளையிட வேண்டும். இவை அனைத்தையும் செய்த பின்னரே குறித்த மண்பாண்டங்களை விற்பனை செய்யலாம்.

இவற்றிற்கு எல்லாமே பொறுமையும் நிதானமும் அவசியம.; கொஞ்சம் பொறுமை இழந்தால் கூடி பொருட்களில் ஓட்டை, நெளிவு, வடிவம் மாறுதல் மற்றும் உடைவு ஏற்ப்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

கேள்வி: சூளை கொட்டில் அமைத்தல் மற்றும் அது தொடர்பான செயற்பாடுகள் எவ்வாறு காணப்படுகின்றது?

பதில்: சூளை அமைத்து மண்பாண்டங்களை சுடுவது என்பது எமது தொழிலின் பிரதான விடயமாக காணப்படுகின்றது. இதற்கு துணையாக அமைக்கப்படுவதே சூளை கொட்டில் ஆகும். அந்த வகையில் ஒரு சூளை கொட்டில் அமைப்பதற்கு 150,000 ரூபாய்கள் வரை தேவைப்படுகின்றது. சூளை சுவர்கள் களி மண்ணாலும், கூரைகள் ஓடு மற்றும் தகரம் போன்றவற்றை கொண்டு அமைக்கப்படுகின்றது. இரண்டு வருடங்கள் மாத்திரம்தான் ஒரு சூளைக்கொட்டிலை பயன்படுத்த முடியும். பின்பு புதிய சூளை அமைக்கப்பட வேண்டிய கட்டாயம் காணப்படுகின்றது.

கேள்வி: எத்தனை மாத இடைவெளியில் சூளை இடுவீர்கள்?

பதில்: மாத இடைவெளிகள் இல்லை. குறைந்தது 400 தொடக்கம் 500 வரையிலான மட்பாண்டங்களை செய்த புறகு அவற்றை ஒரே தடவையில் சூளையிடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம்.

கேள்வி: ஆரம்காலத்திற்கும், தற்காலத்திற்கும் இடையிலான மண்பாண்ட உற்பத்திபொருட்களின் நுகர்வு மக்கள் மத்தியல் எவ்வாறு காணப்படுகின்றது?

பதில்: ஆரம்ப காலங்களில் மக்கள் மத்தியில் மண்பாண்டங்களுக்கு நல்ல கேள்வி காணப்பட்டது, ஆனால் தற்போதைய சூழலில் மட்பாண்டங்களுக்கான கேள்வி குறைவடைந்து மக்கள் ஏனைய பிரதியீட்டு பொருட்களை கொள்வனவு செய்து பயன்படுத்துவதன் காரணமாக எமது உற்பத்தி வீழ்ச்சியடைந்துகொண்டே செல்கின்றது. மற்றும் தற்போது வீட்டுவியாபாரம் குறைவடைந்து மொத்த கேட்பவர்களுக்கு மாத்திரம் பொருட்களை செய்து குடுக்கக்கூடிய நிலைமை காணப்படுகின்றது,

கேள்வி: இத்தொழிலின் ஊடாக கிடைக்கும் வருமானம் உங்களுடைய வாழ்வாதாரத்தினை கொண்டு நடாத்த போதுமானதாக உள்ளதா?

பதில்: பொருளாதார ரீதியாக பார்க்கின்ற போது தற்கால சூழலில் வருமானம் போதுமானதாக இல்லை. இருந்த போதிலும் எங்கள் குடும்பத்தினை இவ்வளவு காலமும் வாழ வைத்துக்கொண்டிருந்த இந்த தொழிலை நான் குறை சொல்ல விருப்பவில்லை.

கேள்வி: நீங்கள் இடம்பெயர்ந்து மீழ்குடியேற்றம் செய்யப்பட்ட புறகு இந்தொழிலை மேற்க்கொள்வதற்கு அரசாங்கத்தினால் உதவித்தொகைகள் அல்லது உதவித்திட்டங்கள் ஏதாவது கிடைப்பெற்றனவா?

பதில்: இதுவரை காலமும் அரசாங்கம் சார்பாக நிதியுதவிகளோ, பொருள்சார்திட்டங்களோ, சுயதொழில் முன்னேற்ற திட்டங்களோ எதும் எனக்கு கிடைக்கப்பெறவில்லை. ஆனால் ஐஆழு எனப்படும் நிறுவனம் மண்பாண்டம் செய்துகாய வைப்பதற்கு தேவையான குடிசையமைக்க உதவி செய்தது.

கேள்வி: உங்களுக்கு புறகு இந்த தொழிலை உங்களுடைய பிள்ளைகள் கற்றுக்கொண்டுள்ளார்களா?

பதில்: இல்;லை.என்னுடைய மகன் இந்த தொழிலை கற்றுக்கொள்ள விரும்பவில்லை. அதனால் நான் மகனை கட்டாயப்படுத்தவும் இல்லை. எனக்கு பிறகு இந்த தொழிலை செய்வதற்கு எங்கள் குடும்பத்தில் யாரும் இல்லாமல் போய்விட்டார்கள் என்ற வேதனை காணப்படுகின்றது. நான் எனது அப்பாவிடம் இருந்து தொழிலைக்கற்றுக்கொண்டேன் ஆனால், எனக்குப்புறகு எங்கள் தொழில் மறக்கப்பட்டு, அழிவடைந்து சென்றுவிடுமோ? என்ற மிகப்பெரிய கவலையுள்ளது.

கேள்வி: தனியார் நிறுவனங்கள், அமைப்புக்கள் முன்வந்து தற்கால இளைய தலைமுறையினரிடையே இக்கைத்தொழிலை பழக்க உங்களுக்கு அழைப்பு விடுத்தால் உங்கள் நிலைப்பாடு எவ்வாறாக அமையும்?

பதில்: ஆரம்பத்தில் என்னை இவ்வாறு கேட்டார்கள் அப்போது என்னுடைய குடும்பச்சூழல் பழக்குவதற்கு உகந்ததாக அமையாத காரணந்தால் நான் மறுத்துவிட்டேன். ஆனால் தற்போது அப்பிடியா எவராவது முன்வந்து கேட்பார்களேயானால்; நிச்சயமாக நான் கற்ற தொழிலை அழிந்து விடாமல் காப்பாற்றுவதற்கு இளம் தலைமுறையினரிடையே மட்பாண்ட கைத்தொழிலின் மகத்துவத்தினை உணர்த்தி கற்றுக்கொடுப்பதற்கு நான் தயாராக உள்ளேன்.

Related posts

வைத்திய நிபுணர் சரவணபவாவுக்கு யாழ். விருது வழங்கி கௌரவிப்பு

Thumi202121

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று இல்லை

Thumi202121

நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்

Thumi202121

Leave a Comment