நல்லூர்க் கந்தன் பெருந் திருவிழாவை முன்னிட்டு யாழ்.மாநகர சபையின் சைவ சமய விவகாரக் குழுவால் வருடந்தோறும் வெளியிடப்பட்டு வரும் நல்லைக்குமரன் மல ரின் 32 ஆவது இதழ் வெளி மீட்டு விழாவும் யாழ் விருது வழங்கும் நிகழ்வும் நேவைத்திய நிபுணர் சரவணபவாவுக்கு யாழ். விருது வழங்கி கௌரவிப்பு
நல்லூர்க் கந்தன் பெருந் திருவிழாவை முன்னிட்டு யாழ்.மாநகர சபையின் சைவ சமய விவகாரக் குழுவால் வரு டந்தோறும் வெளியிடப்பட்டு வரும் நல்லைக்குமரன் மலரின் 32 ஆவது இதழ் வெளியீட்டு விழாவும் யாழ் விருது வழங்கும் நிகழ்வும் 15.08.2024 காலை 9 மணியளவில் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன கலா மண்டபத்தில் யாழ் மாநகரசபையின் ஆணையாளர் ந.கிருஷ்ணேந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பெண் நோயியல் வைத்திய நிபுணர் ந.சரவணபவாவின் அர்ப்பணிப்பு மிக்க வைத்திய சேவைகளைப் பாராட்டி யாழ் மாநகர சபையின் சைவசமய விவகாரக் குழுவால் உயர் விருதான யாழ்.விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். வைத்திய நிபுணர் தனது வாழ்க்கைத் துணைவியுடன் இணைந்து குறித்த விருதைப் பெற்றுக் கொண்டார். யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் கற்று கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீடத்திற்குத் தெரிவாகி வைத்தியரான இவர் லண்டன் சேர்ஜேம்ஸ் பஜட் பல்கலைக்கழகத்தில் மகப்பேற்றுத் துறையில் நிபுணத்துவம் பெற்றார். கிளிநொச்சி வைத்தியசாலையில் பெண் நோயியல் விடுதியை ஆரம்பித்து பாமரப்பெண்களும் மருத்துவ சேவையைப் பெற்றுக் கொள்ள வித்திட்ட இவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் மகப்பேற்றுப் பெண் நோயியல் விடுதியை ஆரம்பித்துப் பல வருடங்கள் பெண் நோயியல் வைத்திய நிபுணராகச் சிறப்பாகச் சேவையாற்றினார். அதுமாத்திரமன்றி 2014 ஆம் ஆண்டு முதல் நெடுந்தீவு, நயினாதீவு, புங்குடுதீவு போன்ற கஷ்டப் பிரதேசங்களில் அமைந்துள்ள வைத்திய சாலைகளிலும், 2018 ஆம் ஆண்டு முதல் காரைநகர், மண்டைதீவு, ஊர்காவற்றுறை ஆகிய பிரதேச வைத்திய சாலைகளிலும் மாதமொரு தடவை தனது வைத்திய சேவையை வழங்கி வருகின்றார். தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று பெண் நோயியல் வைத்திய நிபுணராக விளங்கி சீரிய சேவைகள் புரிந்து வருகிறார். இதேவேளை, உயரிய விரு தான யாழ். விருது 2006 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.