இதழ் 76

கின்னஸ் சாதனைப் படைத்த யாழ் மாணவி!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் க.பொ.த சாதாரண தரம் பயிலும் மாணவியான மாதங்கி கனகசுந்தரம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். வேகமாக அதிக எண்ணிக்கையான பாதணிகளை அடுக்குதல் என்னும் தலைப்பின் கீழான போட்டியிலேயே இந்த சாதனையை படைத்துள்ளார்.

இணையத்தளம் ஊடாக விண்ணப்பித்து 10 பாதணிகளை ஒன்றன் மேல் ஒன்றாக 59 செக்கன்களில் அடுக்கி குறித்த சாதனையை புரிந்துள்ளார். கடந்த மே மாதம் 20ஆம் திகதி கொடிகாமத்தில் உள்ள வீட்டில் இரு சாட்சிகள் முன்னிலையில் கின்னஸ் உலக சாதனை சட்டதிட்டங்களுக்கு அமைவாக குறித்த சாதனை நிகழ்வு காணொளியாக பதிவு செய்யப்பட்டு இணையத்தினுடாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

மூன்று மாதங்களின் பின் world guiness assesment commity மூலம் இதன் உண்மைத்தன்மை ஆராயப்பட்டு 28.8.2024 அன்று நிகழ்வு கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு அதற்கான சான்றிதழ் குறித்த மாணவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜஸ்பிரித் பும்ரா கடந்து வந்த கடினமான பாதை

Thumi202121

ஈழத்தின் முதன்மைச் சித்தர் கடையிற் சுவாமிகள்

Thumi202121

குழந்தைகள் உலகம் எப்போதும் அழகானது

Thumi202121

Leave a Comment