இதழ் 76

வினோத உலகம் – 39

உலகின் ரொமான்டிக் தலைநகராக நீண்ட காலம் முதலிடத்தில் இருந்த பாரீஸ், தற்போது 2வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அமெரிக்காவின் ஹவாய் தீவு முதலிடத்திற்கு வந்துவிட்டது. இந்த ஆய்வை, பன்ஜெத் சுற்றுலாத்துறை டாக்கர் அமைப்புடன் இணைந்து 2000 அமெரிக்க ஜோடிகளிடம்  நடத்தியது. ஹவாய் தீவுகள், தம்பதியருக்கு மிகுந்த காதல் உணர்வுகளை எற்படுத்துவதாக பலரும் கூறுகின்றனர். அங்குள்ள ரிசார்ட்ஸ், கடற்கரைகள், மூங்கில் வனம், அழகான சூரிய அஸ்தமம் ஆகியவற்றால் பலரும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து முதலிடம் தந்துள்ளனர்.

பாகிஸ்தானில் அழிவின் விளிம்பில் உள்ள பட்டாம்பூச்சிகளை வளர்த்து வருகிறார் இயற்கை ஆர்வலரான ஷிரீன். கடந்த 20 வருடங்களாக இதைச் செய்து வருவதாக அவர் கூறுகிறார். 2016 இல் ஒரு பட்டாம்பூச்சிகளுக்கான ஒரு கழகத்தை முன்னெடுத்தார் ஷிரீன்.

இந்த கழகத்திற்கு கராச்சியில் உள்ள பள்ளிகளின் மாணவர்கள் அடிக்கடி வருகிறார்கள். “இதனால் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு, புரிதல் அவர்களுக்கு ஏற்படும். அது எதிர்கால தலைமுறையினருக்கு மிகவும் முக்கியம். சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விஷயங்களை இவர்கள் இங்கு கற்றுக்கொள்கிறார்கள்.” என்கிறார் அவர்.

Related posts

மனதை அறிந்து கொள்வோம்

Thumi202121

ஜஸ்பிரித் பும்ரா கடந்து வந்த கடினமான பாதை

Thumi202121

கின்னஸ் சாதனைப் படைத்த யாழ் மாணவி!

Thumi202121

1 comment

Leave a Comment