இதழ் 78

ஈழத்து மாணவன் கண்டுபிடித்த இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரம்

இலத்திரனியல் வாக்களிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் சி.கபிலாஸ் என்ற மாணவன் சாதனை படைத்துள்ளார்.

அகில இலங்கை ரீதியில் நடைபெறும் ரொபோட்டிக் தொடர்பான புத்தாக்கப் போட்டியினை முன்னிட்டு வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய சி.கபிலாஸ் என்ற மாணவன் இலத்திரனியல் முறையில் வாக்களிக்கும் இயந்திரம் ஒன்றை கண்டு பிடித்துள்ளார்.

குறித்த இயந்திரத்தில் வாக்காளர்கள் தமது கடவுச் சொல்லை (வாக்கு சீட்டு இலக்கம்) செலுத்தி தமது கைவிரல் அடையாளத்தை பதிவு செய்து விரும்பிய கட்சிக்கு வாக்களிக்க கூடியதாக அது வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், மொத்த வாக்குளை அறியும் வசதியும் காணப்படுகின்றது. போலியான முறையில் மீண்டும் ஒருவர் வாக்குகளை அளிக்க முயன்றால் அதனை அந்த இயந்திரம் நிராகரித்து குறித்த நபரை வெளிப்படுத்தும் வகையில் தொழில் நுட்பத்தை பயனபடுத்தி இவ் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Related posts

என் கால்கள் வழியே… – 11

Thumi202121

இலங்கை கிரிக்கெட் அணியில் சாதிக்கும் தமிழ் வீரர்கள்

Thumi202121

உலகின் பேரழகின் இரகசியம் தெரியுமா?

Thumi202121

Leave a Comment