கடந்த மாதம் தேசிய ரீதியில் விளையாட்டு மற்றும் கலை நிகழ்வுகளில் யாழ் இந்துக் கல்லூரி பல சாதனைகளை படைத்துள்ளது.
உதைபந்தாட்டத்தில் இரண்டாமிடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியது யாழ் இந்து அணி. இலங்கை பாடசாலை உதைபந்தாட்ட சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட 14 வயதிற்குட்பட்ட மாவட்ட ரீதியான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் எமது பாடசாலை அணி இரண்டாமிடத்தினை பெற்றுக்கொண்டு தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது. இதில் 20 அணிகள் பங்கேற்றிருந்தன. தொடர் நாயகனாக மு. அக்சயன் தெரிவு செய்யப்பட்டார். 26 வருடங்களுக்கு பின்னர் உதைபந்தாட்டத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட உயர்ந்த பெற்பேறு இதுவாகும்.
இலங்கை பாடசாலை கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் 15 வயதிற்குட்பட்ட D பிரிவு போட்டியில் யாழ் இந்துக்கல்லூரி அணி இரண்டாமிடத்தினை பெற்றுக் கொண்டது. இப்போட்டிகள் மட்டக்களப்பில் இடம்பெற்றன.
அகில இலங்கைத் தமிழ்த்தினப் போட்டி 2024 தேசிய மட்ட தனி இசை பிரிவு 2 இல் கோகுலன் சாகித்தியன் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டார்.
யாழ் இந்துக் கல்லுரியின் சிரேஸ்ட ஆங்கில கவிதை நாடகம் தேசிய மட்டத்தில் முதலாமிடத்தினை பெற்றுள்ளது. முதல் தடவையாக வடமாகாண பாடசாலையொன்று தேசிய மட்ட ஆங்கில நாடக போட்டியில் முதலாமிடத்தினை பெற்றுள்ளது.
அகில இலங்கை கர்நாடக சங்கீத போட்டி – 2024 இலும் நாட்டார் பாடல் பாடிய யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவர்கள் தேசிய மட்டத்தில் முதலாம் இடம் பெற்றார்கள்.
அகில இலங்கை கர்நாடக சங்கீத போட்டி 2024 யில் தனி வாத்தியம் பிரிவில் வயலின் – கௌ.அரோசன் மற்றும் மிருதங்கம் – ர.லயசர்மா ஆகியோர் தேசிய மட்டத்தில் முதலாம் இடம் பெற்றனர்.
2024 அகில இலங்கை கர்நாடக சங்கீத போட்டியில் இசை நாடகப் பாடல் பிரிவில்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் அரிச்சந்திரா மயான காண்டம் நடித்து தேசிய மட்டத்தில் முதலாம் இடம் பெற்றனர்.