இதழ் 80

என் கால்கள் வழியே… – 12

டெல்லியில் பயணத்தை இலகுவாகவும் கடினமாகவும் ஆக்கிய ரதங்கள்!

டெல்லியில் என் பயணத்தின் நினைவுகளை பயணத்திற்கான முறைகளும் நிறைய நிறைவான செய்திகளை சேகரித்துள்ளது. மெட்ரோ புகையிரத பயணங்களிற்கு அப்பால் உள்ளக அயல் பயணங்களுக்கு றிச்சா, பேரூந்து, துவிச்சக்கரவண்டி (புரியுற மாதிரி சொன்னா சைக்கிள்), இருசக்கர வண்டி (புரியுற மாதிரி சொன்னா மோட்டார் சைக்கிள்), மற்றும் நடையும் பயனாகியுள்ளது. இதன விட Rapido/ uber செயலிகள் அதிக கதைகளை கொண்டுள்ளது.

ஊரில நடைதூரத்தில இருக்குற கடைக்கு போறதுனாலும், என் ரதமாகிய Suzukiயயையே முறுக்கியே பழகி இருந்தேன். டெல்லியில் தனிக்குடித்தனம் கட்டுப்பாடான செலவு நாளடைவில் நிலையை மாற்றியது. ஆரம்ப நாட்களில ஊர்ப்பழக்க சொகுசில எங்க போறதுனாலும் Rapido/ Uber நண்பன் இருக்குறான் என்ற எண்ணங்களுடனேயே பயணம் ஆரம்பமாகும். என் நினைவுக்குள் நான் டெல்லியில் என் தேவைக்காக முதல் இறக்கிய தொலைபேசி செயலி Rapido மற்றும் Uberஆ தான் இருக்கும். இந்தியால செயலிகளாலேயே பலதை கடந்து செல்லலாம். இதைப்பற்றி முழுமையாகவே எழுத வேண்டும். பின்னொரு கட்டுரையில் ‘டிஜிற்றல் இந்திய’ அனுபவங்களை பகிருகிறேன். இப்பதிவின் பயண முறை சேகரித்துள்ள நினைவுகளே நீளமானது.

டெல்லிக்கு விமானத்தில வந்து இறங்கியதும், டெல்லிக்குள் பிரவேசம், எங்களை வரவேற்க வந்திருந்த தங்கைகள் Uber செயலியில் பதிவு செய்து மகிழூந்துல (பொதுப்புரிதலுக்கு சொன்னால் கார்) தான் அமைந்திருந்தது. ஏனுனா விமான நிலைய வளாகத்திற்குள் செயலி பதிவூடாக வாகனங்களை பெறக்கூடிய வசதி Uber மற்றும் Ola செயலிகளுக்கே வழங்கப்பட்டுள்ளது. Rapido அத்தகைய வசதியை பெறவில்லை. நான் அதிகம் டெல்லியில் பயன்படுத்திய வாகன செயலி Rapido தான். ‘First Impression Best impression’ என்பாங்கள். Rapido உடனான ஈடுபாடும் அத்தகையானதே. பின்னாட்களில் பல வடுக்களையும் தந்தது. ஆனாலும் வாகன செயலி பற்றிய முதல் அறிமுகத்தில், தமிழ்நாட்டு நண்பர்கள் Rapido பற்றி தெரிவித்த பரிந்துரை ஆழாமாக பிணைந்து விட்டது. டெல்லியில பெரிசா அதில குறையும் காணவில்லை.

முரண்பாடு மொழியினால் தான் வரும். மொழி தான் நமக்கு எங்கேயும் முரண்பாடு. ஒருமுறை இலங்கை தூதரகம் போயாச்சு. திரும்பி செல்வதற்கு Rapido போட்டாச்சு. அதிகம் இருசக்கர வண்டி தான் போடுவது. சாரதி தொலைபேசி அழைப்பில் என் Locationக்கு வந்து விட்டதாக கூறுகின்றார். அவரை காணவில்லை. மீள அவர் ஏதோ சொல்றார், எனக்கு புரியல. தொலைபேசியிலும் Battery charge குறைவாகவே உள்ளது. கடவுள் போல பொதுவான ஆங்கில மொழியும் ஹிந்தி மொழியும் தெரிந்த வழிப்போக்கன் அவ்விடமாக வந்தார். அவரிடம் உதவியாக Rapido சாரதிக்கு என் அமைவிட குறிப்பை தெரிவிக்குமாறு கேட்டேன். அவரும் சாரதிக்கு விளக்கம் கொடுத்தார். சாரதி பின்வீதியிலேயே நின்றார். நான் வளைவில் திரும்பினாலோ அல்லது அவர் வளைவில் திரும்பினாலோ சந்தித்திருப்போம். எனக்கு ஹிந்தி புரியல, சாரதிக்கு என் ஆங்கிலம் புரியல. இவ்மொழி முரண்பாடு அநேகமாகவே டெல்லியில் எதிர்கொண்டேன். பல சந்தர்ப்பங்களில் மௌனமே மொழியாவதுண்டு.

இதனை விட பெரிய சம்பவங்களும் Rapido தந்திருக்கு. ஒன்று நான் தேடிய வினை, ஆதலால் அதற்கு தீர்வை பெற முடியவில்லை. மற்றையது சாரதியின் ஏமாற்று வேலை. அதற்கு தீர்வை பெற முடிஞ்சுது.

முதலில மற்றவங்க தவறையே பார்ப்போம். அது தானே உலக வழக்கம். டெல்லி விமான நிலையத்திற்கு செல்வதற்கு Rapidoவில் மகிழூந்து போட்டேன். விமான நிலையம் என்றால் மகிழூந்து தான் உள்ளே போகும். இருசக்கர வண்டிக்கு அனுமதி இல்லை. மெட்ரோ புகையிரதத்தில விமான நிலையத்துக்கு இலகுவாக போகக்கூடிய சூழலிலும், பொதியை இழுத்து செல்ற கடினத்தில மகிழூந்தை தேர்வு செய்தேன். எனக்கும் பயணம் இறுதி நேர அவசரமாகவும் அமைந்திருந்தது. செயலியில் 300 ரூபாவே காட்டியது. எனினும் விமான நிலையத்தில் இறங்குகையில் சாரதி தரிப்பிட கட்டணமெனக்கூறி 600 ரூபா கோரியிருந்தார். எனக்கும் பயண அவசரத்தால் முரண்பட நேரமின்றி பணத்தை இணைய வழியில் பகிர்ந்தேன். எனினும் ஏமாந்துட்டேனே என்பது மனதை கடுமையாக நெருடியது. ஆக Check-inக்கு நிரலில் நிற்கையில், பயணத்துக்கு மதிப்பீடு வழங்குவதில் சாதரணமாக ஒரு Star மாத்திரம் தெரிவு செய்தேன். சிறிது நேரத்தில் Rapido வாடிக்கையாளர் சேவைலிருந்து தொலைபேசி அழைப்பு வந்திச்சு, மதிப்பீடு குறைவுக்கான காரணத்தை வினாவினார்கள். விபரத்தை கூறினேன். மின்னஞ்சல் அனுப்புமாறு கூறினார்கள். ஏமாற்றத்தின் நெருடலால், சாரதி மேல வழக்கு தொடுப்பதே பெரிய ஆறுதலாக மின்னஞ்சல் அனுப்பினேன். இணையத்தில் பணம் பகிர்ந்தமையால், அவ்விபரத்தையும் மின்னஞ்சலில் இணைத்தேன். சிறிது நேரத்திலேயே Rapido மன்னிப்பு கோரியதுடன், மேலதிக பணத்தை மீள திருப்பியிருந்தார்கள். இது பெரிய திருப்தியை தந்தது. உள்ளுக்குள்ள ஒரு பெருமிதம்.

இனி என் தவறால் தீர்வை பெற முடியாது போன சம்பவத்தை குறிப்பிடுவோம். இதுவும் புகையிரதம்-விடுதிக்கு இடையிலான பயணக்கதை தான். இது டெல்லி Arrival. முதல் சொன்னது டெல்லி Departure. மற்றும் முதல் சொன்னது பகல். இரண்டாவது இரவு. விசயத்துக்கு வருவோம். டெல்லிக்கு பயணம். நள்ளிரவு தான் சென்றடைந்தேன். டெல்லி விமான நிலைய மெட்ரோ புகையிரதம் 11.30க்கு மூடிடுவாங்க. மறுபடி காலை 4.45க்கு தான். ஆக என் வழக்கமான Rapido போட்டன். இம்முறை இருசக்கர வண்டியையே தேர்வு செய்தேன். பெரிய பொதி இல்லை. இருசக்கர வண்டி உள்ளே வர முடியாததால் சாரதி வெளியே வரச் சொன்னார். நானும் வெளியே போனேன். விமான நிலையத்தில் பயண வசதி உள்ள Uberஇல் எவ்வளவு பண காட்டுவதாக கேட்டார். நான் குறைவாகவே கூறினேன். அதை தரும்படி கேட்டார். நானும் சம்மதித்தேன். Rapido செயலியை நிறுத்தி விட்டு தான் பயண பட்டோம். பயண நடுவில் பெரிய மழையும் வந்திச்சு. இடைநடுவில் மழைக்கு ஒதுங்கினோம். மழை நிற்பதாகவில்லை. நேரமும் அதிகமாக கடந்தது. எனவே மழை குறைய மழைக்குள்ளேயே தூறலுக்குள் பயணப்பட்டோம். விடுதி சேர்ந்ததும், தனது தொலைபேசியில் Uber பண அளவு பரிசோதித்து நிதியை கேட்டார். ஆனால் அப்பணத்தொகை முன்னர் கதைத்ததை விட அதிகமாகவே இருந்தது. ஏறத்தாழ மகிழுந்து நிதியை அண்மித்தது. மழைக்குள் நனைந்து வந்து, மகிழூந்து சவாரிக்குரிய பணத்தை கொடுப்பதற்கு, மகிழூந்தில் சொகுசாக துயில் கொண்டு வந்திருக்கலாம் எனும் ஆதங்கம் பணம் கொடுக்க மறுத்தேன். சாரதியும் குறைத்து வருவதாக இல்லை. நான் பேசியதை விட 50 ரூபா அதிகம் தருவதாக ஏற்றேன். எனினும் சாரதி கிழுகுப்பிடியாக இருந்தார். தொடர்ந்து நானும் அதே கிளுங்கு பிடியை தொடர்ந்தேன். ஒரு படத்தின் நகைச்சுவையில் சந்தானமும் இன்னொருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டே நிற்க நாட்கள் கடந்து போகும். அவ்வாறே நானும் சாரதியும் விட்டுக்கொடுப்பின்றி நின்றோம். மணிக்கணக்கானது. சாரதிக்கு வேறு Rapido கோரல்களும் வந்து கொண்டேயிருந்தது. இறுதியில் சாரதி இறங்கி வந்து எனது 50 ரூபா மேலதிக பண இணக்கத்தை வாங்கி சென்றார்.

முதலாவதில் எனது பக்கம் தவறற்று, சாரதி ஏமாற்றியமையால் Rapido பணத்தை மீள ஒப்படைத்தது. இரண்டாவதில் சாரதியின் நலன் கருதி நானும் சாரதியுடன் இணைந்து Rapidoவை ஏமாற்றினோம். அதன் அறுவடையையும் அப்பயணத்திலேயே பெற்றேன்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் Rapido போட்டு, சாரதி வந்து அப்பக்கம் தனக்கு தூரமெனக்கூறி, Orderஐ Cancel பண்ண சொன்னார். எனினும் சாரதி வந்து Cancel பண்ணினா எனக்கு காசு வெட்டுமென நான் Cancel பண்ண மறுத்து விட்டேன். எனக்கு முன்அனுபவம் உண்டு. முன்னர் ஒருதடவை தொலைபேசி Struckஆகி Cancel ஆனதால் அடுத்த பயணத்தில் அப்பணத்தில் ஒருபகுதியை கொடுக்க நேரிட்டது.

இப்படி வில்லங்கமான கதைகள் இருந்தாலும், டெல்லி பயணத்தில் Rapido. பெரும் பகுதியை நிரப்புகிறது. இதைவிட பேருந்து, றிச்சா மற்றும் நடைபயணம் எல்லாம் தனிக்கதையாய் அனுபவங்களை அள்ளி தந்துள்ளது.

தொடராய் தொடருவோம்….!

Related posts

ATM இயந்திரம் உருவாக காரணமாக இருந்த காதல்

Thumi202121

ஈரடியால் உலகளந்த வள்ளுவர்

Thumi202121

ஈழத்தின் நாடகக் கலையின் பேராளுமை குழந்தை ம.சண்முகலிங்கம் – நினைவுகளின் நிழல்கள்

Thumi202121

Leave a Comment