இதழ் 85

உரிமையற்று உயரும் மலையகம் காணியின் கேள்விக்குள்அடையாளத் தேடல்

மலையக மக்களின் அடிப்படை உரிமைகளில் காணி உரிமையும் முக்கியமானதொரு அம்சமாகும். நீண்ட காலமாகவே நிலத்திற்கான உரிமையற்ற ஒரு சமூகமாக இருப்பதோடு எமது தலைமுறைக்கே நில உரிமை என்பது மறுக்கப்பட்டதாகவே காணப்படுகின்றது. அதற்கான வெளிச்சம் இதுவரையிலும் எட்டப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. மனிதர்கள் காலடி படாத காடுகளை அழித்து அதில் பெருந்தோட்டங்களை உருவாக்கி இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு உழைப்பை வழங்கிய எம் மக்களின் விழித்தோன்றல்களுக்கு அடிப்படையான காணி உரிமை என்பது மறுக்கப்பட்ட விடயமாக காணப்படுகின்றது. உண்மையிலேயே இது நீதியானதா?, ஏன்?; இதற்கான நீதியை நிலைநாட்ட அரசாங்கங்களும் பெருந்தோட்ட கம்பெனிகளும் முன்வருவதில்லை என்பது கேள்விக்குறிய விடயமாகும்.
நீண்ட காலமாகவே சட்டம், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல அடிப்படை வசதிகளில் பின்தங்கிய நிலை காணப்பட்டு வரும் இந்த சமூகத்திற்கு, காணி உரிமை மறுக்கப்படுவது மேலும் அச்சமூகத்தின் இருப்பை நிலைக்குலையச் செய்வதாகக் காணப்படுகின்றது. எமது வாழ்விடங்கள், பயிரிடங்கள் என்பவை உரிமையற்று இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் இழக்கப்படும் அபாயத்தில் உள்ளது. இது எங்கள் வாழ்வில் ஒரு நிலைத்தன்மையை ஏற்படுத்துவதில் பெரும் தடையாக உள்ளமை துரதிஸ்டவசமான விடயமாகும்.


மக்கள் அவர்களுக்கான காணி உரிமையை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு போராட்டங்களை அன்றாட மேற்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனாலும் இன்று வரை தீர்வு காண முடியாத தன்மையிலே காணப்படுகின்றது. காணி உரிமைக்கான முதலாவது போராட்டம் 1946 ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் மலையக மக்களின் முதலாவது காணிக்கான போராட்டம் கேகாலையின் உருவள்ளி பெருந்தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. அப்பெருந்தோட்டத்தில் அம்மக்களின் 400 ஏக்கர் குடியிருப்பு நிலம் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமது காணிகளைப் பாதுகாக்க முன்னெடுக்கப்பட்ட போராட்டமாக அது அமைந்திருந்தது. இலங்கைப் பெருந்தோட்டங்களில் உள்ள இந்திய வம்சாவளித் தொழிலாளர்களின் காணி உரிமைகளைக் கோரி இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிற்சங்க சம்மேளத்தினால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் கேகாலை மற்றும் களனிப் பள்ளத்தாக்கு பிரதேசங்களைச் சேர்ந்த 125,000 த்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றிருந்தனர்.
1972 ஆம் ஆண்டின் காணிச் சீர்திருத்தச் சட்டம் குடியேற்றங்கள் உருவாகவும் காணிக் கையகப்படுத்தல்கள் நிகழவும் வழிவகுத்தது. தொடர்ச்சியான காணிக் கையகப்படுத்தல்கள் போராட்டங்களுக்கு வழிவகுத்தன. டெவோன் தோட்டத்தின் 7,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு எதிராக மே 11, 1977 அன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது சிவனு லட்சுமணன் என்ற இளம் தோட்டத் தொழிலாளி பொலிசாரினால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் விளைவாக பெருந்தோட்ட நிலங்களை பறிமுதல் செய்யும் திட்டம் கைவிடப்பட்டது.


அதே போன்று, 2000 ஆம் ஆண்டில், மேல் கொத்மலை நீர் மின்சார திட்டத்துக்காக அப்பிரதேச மக்களை வெளியேற்றும் முன்னெடுப்பு தொடர்ச்சியான மக்கள் போராட்டம் காரணமாக கைவிடப்பட்டது. 2014 ஆம் ஆண்டு பதுளை மாவட்டத்தின் ஹபுத்தளை பிரதேசத்தில் மேரியாவத்த பகுதியில் இடம்பெற்ற நிலச்சரிவு பேரழிவின் பின்னர், மலைநாட்டில் வாழும் மக்களுக்கு குடியிருப்புக்கு பொருத்தமான இடங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க கோரிக்கை நாட்டின் அனைத்து பாகங்களில் இருந்தும் முன்வைக்கப்பட்டது.
1972 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க காணி சீர்திருத்த ஆணணக்குழு சட்டத்தின் பிரிவு 3(டி) இன் பிரகாரம் பெருந்தோட்டங்களில் லயன் வீடுகளில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு 20 பேச்சர்ஸ் அளவிலான காணி ஒதுக்கப்படுவது. உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் தற்தபோதைய அரசாங்கம் மலையக மக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 10 பேச்சர்ஸ் துண்டு அளவான காணியை மாத்திரம் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக அறிய முடிகிறது. நாட்டில் காணி இல்லாத பிரiஐகளுக்கு காணி வழங்குவதற்காக காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம் (1935), அரச காணிகள் கட்டளைச் சட்டம் (1947), காணி கையளிப்பு (விசேட ஏற்பாடுகள்) சட்டம் (1979), காணி சீர்திருத்த ஆணணக்குழு சட்டம் ஆகிய சட்டங்கள் ஊடாக அனுமதிப்பத்திரம் (pநசஅவை) அளிப்புப் பத்திரம் (பசயவெ) மற்றும் அறுதியீட்டு உறுதியூடாக (னநநன ழக வசயளெகநச) காணி உரிமை வழங்கப்படுகிறது.


எனினும் மலையக மக்களுக்கு இந்த சட்டங்களில் ஏற்புடைய சட்டங்களைப் பயன்படுத்தி அனுமதிப்பத்திரமோ, அளிப்புப் பத்திரமோ, அறுதியீட்டு உறுதியோ இதுவரை வழங்கப்படவில்லை. நாட்டில் காணியற்ற பிரiஐகள் உரிய அரச அதிகாரிகள், அரசு நிறுவனங்களின் மூலம் மற்றும் காணி கச்சேரி ஊடாக பதிவு செய்யப்படுகின்றனர். எனினும் மலையக மக்கள் தொடர்பில் அவர்களின் குடியிருப்பு மற்றும் காணி விவகாரங்களை பெருந்தோட்ட கம்பனிகளும், கம்பனிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கம்பனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியமும் (Pர்னுவு – வுசரளவ) தொழிற்சங்கங்களும் மேற்கொள்கின்றன.


கிரமங்களில் வாழும் மக்களுக்கு வசிப்பதற்காக 20 பேச்சர்ஸ் அல்லது அதற்கு அதிகமான அரசக் காணிகள் சட்ட ரீதியாக உரித்துடன் வழங்கப்படுகின்றன. எனினும், மலையக மக்களுக்கு வசிப்பதற்காக 1995 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை ஒரு குடும்பத்துக்கு 7 பேச்சர்ஸ் அளவு காணியே வழங்கப்பட்டுள்ளது. அவையும் சட்ட உரித்து அற்றவைகளாகும். மேலும் மலையக மக்களுக்கு பெருந்தோட்ட காணிகளை வழங்குவதற்கு மாத்திரம் பெருந்தோட்ட கம்பெனிகளுக்கும் அரச நிறுவனங்களுக்கும் இடையே காணப்படுகின்ற குத்தகை ஒப்பந்தம் காரணமாக காணி உரிமை மறுக்கப்பட்டு வருகின்றது. அத்தோடு பெருந்தோட்ட கம்பெனிகளுடன் எவ்வித தொடர்புமற்ற காணி சீர்திருத்த ஆணைக்குழுஇ (துநுனுடீ)இ (ளுடுளுPஊ)இ (வுசுஐ) ஆகிய அரச நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ள பெருந்தோட்ட காணிகளை அவற்றில் வாழும் மலையக மக்களுக்கு குடியிருப்பு தேவைக்காக அனுமதிப்பத்திரம் இ அழைப்பு பத்திரம் இ அளிப்பு பத்திரம், அறுதியீட்டு உறுதி ஊடாக வழங்குவதற்கு இதுவரையில் எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்பதே உண்மையாகும்.


காணி உரிமைகள் மற்றும் ஏனைய உரிமைகளுக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் எமது முன்னோர்கள் மேற்கொண்ட தியாகங்கள் அளப்பரியன. மலையக மக்களின் காணி உரிமைக்கான அங்கீகாரத்தை பாதுகாக்க பல ஆர்ப்பாட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதும், அவர்களின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளதுடன் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும். மீறல்கள் தொடர்ந்த வன்னமேயுள்ளன. எனவே, இந்தக் கோரிக்கை நாட்டின் தேசிய உரையாடலில் உள்ளடக்கப்படும் ஒரு தேவை தற்போது எழுந்துள்ளது.


எமது நாட்டில் பிரஜைகளுக்காக குடியேற்ற திட்டங்கள் உருவாக்கப்பட்டு புதிய கிராமங்கள் அமைக்கப்படும் போது ஏனைய எல்லா காரணிகளுக்கு அப்பால் பிரஜைகளின் குடும்ப பாதுகாப்பு நலன் மற்றும் பொருளாதார சுபிட்சம் என்பவற்றுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. எனினும் “ மலையக மக்களுக்கு குடியிருப்புக்காக காணி வழங்கப்படும் பொழுது மாத்திரம் நம் மக்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட தேயிலைச் செடிகளுக்கும் ரப்பர் மரங்களுக்கும் அம்மக்களை விட அதிக மதிப்பு வழங்கப்பட்டு தேயிலைச் செடிகளையும் ரப்பர் மரங்களையும் காப்பாற்றுவதாக கூறி அவர்கள் தொடர்ந்து லயங்களிலே வாழ்வது உறுதி செய்யப்படுகின்றது. ’’
இலங்கையில் வாழும் எல்லாப் பிரஜைகளுக்கும் அரசு காணி வழங்கவில்லை என்பது உண்மையென்ற போதும் தனது சொந்த வருமானத்தில் கொள்வனவு செய்ய முடியாத ஏக பெரும்பான்மை பிரதிகளுக்கு காணி வழங்கி அவர்களின் நில உரிமையும் இருப்பையும் அரசு உறுதி செய்துள்ளது. தொடர்ந்தும் செய்யப்பட்டு வருகின்றது. எனினும் வரலாறு நெடுகிழும் ஏறத்தாழ மலையக மக்கள் அனைவருக்கும் காணி உரிமை மறுக்கப்பட்டமையும் அதன் காரணமாக மிக அடிப்படை உரிமையான முகவரியை கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் ‘‘தோட்ட சொந்தக்காரர்களாக இருந்தவர்கள் வழங்கிய முகவரியை மலையக மக்கள் சுமந்து கொண்டிருக்கின்றனர்” என்பதே நிதர்சனமான உண்மை.


மலையக சமூகத்தின் காணி உரிமைகளை உறுதி செய்வதற்காகவும் காணியற்றவர்களுக்காக காணிகளைக் கோருவதற்காக ஒத்த சிந்தனையுள்ளவர்களை ஒன்று திரட்டவும் ஒரு தேசிய தினம் பிரகடணப்படுத்தப்பட வேண்டும். என மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம் (ஆPPடுசு) நீண்ட காலமாக கோரி வருகின்றது. மலையக மக்களின் காணி பிரச்சினை இன்னும் ஒரு கொள்கை ரீதியில் தேசிய வேலைத் திட்டத்துடன் முன்னெடுக்கப்படாத நிலையில் இ தற்போது அதற்கான அழுத்தங்கள் பாரியளவில் எழுந்திருப்பது முக்கியமான விடயமாகும். அந்த வகையில் மலையக மக்களுடைய காணிக்கான போராட்டமும் அதன் வரலாறும் மிக பழமை வாய்ந்ததாக உள்ளது. மலையக மக்களுடைய காணிக்கான போராட்டம் இந்த நாடு சுதந்திரம் பெருவதற்கு முன்பதாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது வரலாற்று மற்றும் சரித்திரமிக்க போராட்டம் என்பது தற்போது வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளது.
காணி உரிமை இல்லாத காரணத்தினால் மலையக சமூகத்தில் வாழும் ஒரு குடிமகனுக்கு தன்னுடைய வீட்டினை புணர்நிர்மாணம் செய்யும் பொழுதும் சரி அல்லது வீட்டின் ஒரு பகுதியை நிர்மாணிக்கும் பொழுதும் சரி தோட்ட அதிகாரிகளின் அனுமதியை பெற வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. அத்துடன் வீட்டு தோட்டங்களில்; ஒரு மரங்களை நடுவதாக இருந்தாலும் சரி அடிப்படை வசதியான கழிப்பறை ஒன்றை அமைப்பதாக இருந்தாலும் தோட்ட அதிகாரிகளை நாட வேண்டிய ஒரு சூழ்நிலையையே காணி உரிமை இல்லாத காரணத்தால் நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். இதற்கான தீர்வு எமக்கு எட்டப்பட வேண்டும்?;
மலையக மக்கள் பல்லாண்டுகளாகவே காணி உரிமையின்றி வாழ்ந்துவரும் ஒரு சமூகமாகத் திகழ்கின்றனர். நிலம் என்பது வாழ்க்கையின் அடித்தளமான மூலதனமாக இருக்கின்ற நிலையில், எங்களது தலைமுறைகளுக்கு நில உரிமை என்பது எப்போதும் எட்டாத கனவாகவே இருந்து வருகிறது.

இது ஒவ்வொரு தலைமுறையிலும் வாழ்வாதார பாதுகாப்பு, சமூக மதிப்பு மற்றும் அரசியல் அடையாளம் ஆகியவற்றில் ஒரு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.
“எமக்கான உரிமைகள் பல்வேறு விதங்களில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் நிலையிலும் கூட இன்று மலையக சமூகம் ஏதோ ஒரு வகையில் வளர்ச்சி பாதையை அடைந்துள்ளது. எமக்கான உரிமைகள் சரியாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தால்; இன்றைய மலையக சமூகம் எட்டமுடியாத வளர்ச்சியை சந்தித்திருக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. பல்வேறு துன்பங்களுக்கும்; அடிமைத்தனங்களுக்கும் மத்தியிலே மலையக சமுகம் இன்று சமூகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. அது மேலும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றால் எமக்கான உரிமைகள் நிலை நாட்டுவதில் உள்ள அரசியல் தலையீடுகள் புறக்கணிக்கப்பட வேண்டும.”;
மலையக மக்களின் காணி உரிமை என்பது ஒரு சமூக நியாயம் மட்டுமல்ல, மனித உரிமையாகவும் கருதப்பட வேண்டும். இந்த உரிமையை சட்டபூர்வமாக உறுதி செய்யாத வரை, எங்கள் தலைமுறைகளுக்கு ஒளிமிக்க எதிர்காலம் என்பது வெறும் கனவாகவே தொடரும் என்hதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை.

-நிசன்குமார் கோபிநாத்.

Related posts

இதழ் 85

Editor

ஈழத்தின் பொக்கிஷம் பேராசிரியர் கா.சிவத்தம்பி

Editor

துன்புறுத்தல்

Editor

Leave a Comment