இதழ்-34

குழந்தைகளில் ஏற்படும் வலிப்பு/ காக்கை வலிப்பு (EPILEPSY)

இந்த நோய் பிறப்பிலிருந்து எந்த வயதினருக்கும் வரலாம்.

மூளையில் ஏற்படும் அசாதாரண சமிக்ஞைகளின் விளைவாக ஏற்படுவதாகும்.

குடும்ப உறுப்பினர்களுக்கும் இருக்கலாம்.

இந்நோயின் குணங்குறிகள் (Clinical Features of Epilepsy)

  1. பிள்ளை திடிரென நினைவற்று விழலாம்.
  2. இரு கை கால்களிலும் உதறல் எடுக்கலாம்.
  3. கண் மட்டும் அசையலாம்.
  4. கை கால்கள் அசைவின்றி (கட்டை போல) இருக்கலாம்.
  5. உதட்டு ஓரம் சின்ன அசைவுகள் அவதானிக்கலாம்.
  6. பிள்ளை அசைவின்றி சுயநினைவின்றி நிற்கலாம்.

வலிப்பை தூண்டும் காரணிகள்

  1. ஏதாவது கிருமித்தொற்று
  2. உடலில் உள்ள கனியங்களின் சமனிலை இன்மை
  3. குருதியில் குளுக்கோஸின் அளவு குறைவடைதல்
  4. கிராமமாக மாத்திரைகளை எடுக்காத நிலமைகள்
  5. குறைவான அளவில் மாத்திரைகளை எடுத்தல்

காய்ச்சல் போன்ற தூண்டும் காரணிகள் இல்லாத போது வலிப்பு இடம்பெறும் போது வலிப்பிற்கான காரணங்களை அடையாளம் காண்பதற்காக வைத்தியரினால் தேவையான
குருதி பரிசோதனைகள்.
X-கதிர்
தலைப்பட்டி (EEG)
ஸ்கேன் போன்ற பரிசோதனைகளுக்கு சிபாரிசு செய்யப்பட்டு அவற்றின் முடிவுகளின் அடிப்படையில் தேவையான சிகிச்சை முறையினை வைத்தியர் ஒழுங்குபடுத்துவார்.

காக்கை வலிப்பிற்கான சிகிச்சை!

பிள்ளைகளுக்குரிய சிகிச்சையானது வலிப்பின் இயல்பிற்கு தகந்தவாறு வைத்தியரினால் தீர்மானிக்கப்படுவதுடன் பொதுவாக மூன்று வருடங்களுக்கு வைத்தியரின் கண்கானிப்பில் தொடர்ச்சியான கிளினிக் அடிப்படையில் தொடரவேண்டும். கிளினிக் நடைமுறையானது பொதுவாக மாதம் ஒரு முறை அல்லது வைத்தியரின் அறிவுரைக்கு ஏற்ப அமைகின்றன.

சிகிச்சையை தொடர்ச்சியாக இடைவிடாமல் தொடர்வது முக்கியமானது ஏனெனில் பிள்ளைக்குரிய மருந்தின் அளவானது பிள்ளையின் நிறைக்கேற்ப வழங்கப்படுவதுடன்,மருந்தின் அளவானது குறைந்த அளவிலிருந்து அதிகரித்து செல்லப்படுவதுடன் சிகிச்சையானது தொடர்ச்சியாக மூன்று வருடங்களுக்கு வைத்தியரின் பரிந்துரைக்கு அமைவாக நடக்க வேண்டும்.இக் காலப்பகுதியில் வலிப்புகள் வராதவிடத்து மருந்தானது மெதுவாக ஆறு மாதங்களுக்கு குறைத்து நிறுத்தப்படலாம்.

குறித்த சிகிச்சை காலப்பகுதியில் வலிப்பு மீண்டும் வருமாயின் முன்னர் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகள் சரியான அளவில் குறித்த நேரத்தில் வழங்கப்பட்டுள்ளதா (உதரணமாக மாத்திரை காலை 7 மணிக்கு வழங்கப்பட்டால் மாலை 7 மணிக்கு வழங்கப்படுவதாக), கிளினிக் நடைமுறை சரியாக தொடரப்பட்டுள்ளதா என்பன ஆராயப்பட்டு வேறு மாத்திரைகள் சேர்த்து வழங்கப்படலாம்.

குறித்த காலத்தின் பின்னர் மருந்தானது குறைத்து நிறுத்தப்படுகின்ற வேளையில் வலிப்பானது மீண்டும் வருமாயின் வைத்திய ஆலோசனையுடன் சிகிச்சையை மீள் ஒழுங்குபடுத்த வேண்டும்.

சிகிச்சையின் போது பெற்றோர் பொறுமையாக நம்பிக்கையுடன் வைத்தியரின் ஆலோசனைகள் பரிந்துரைகளுக்கு அமைவாக சிகிச்சையை தொடர்கின்ற வேளையில் சிறந்த முன்னேற்றகரமான நிலையை அடையலாம்.

வலிப்பு வருபவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கைகள்!

1.வலிப்பு உள்ளவர்கள் வைத்தியரினால் பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சையை உரிய முறையில் பின்பற்றுதல் வேண்டும்.கிளினிக் நடைமுறைகளை ஒழுங்காக பேண வேண்டும்.

  1. நீர் நிலைகள்,நீச்சல் குளங்கள்,தீ சம்பந்தப்பட்ட நிகழ்வுகள்,உயரமான இடங்களில் ஏறுதல் போன்றவற்றை தவிர்த்தல் அல்லது தனியாக ஈடுபடுதல் கூடாது.
  2. முன் பள்ளி,பாடசாலை ஆசிரியர்களிடம் பிள்ளையின் வலிப்பு பற்றி எடுத்துக்கூறுவதுடன் அவற்றின் போது செயற்படுத்த வேண்டியவற்றை எடுத்துக்கூறல்.
  3. பிள்ளைகளுக்கு உரிய வேளையில் உணவுகளை கொடுத்தல் வேண்டும்.நேரம் தவறி சாப்பிடுதல் அல்லது சாப்பிடாமல் தவிர்த்தல் கூடாது.
  4. உணவு வகைகளில் எந்த காட்டுப்பாடுகளும் தேவையில்லை,எல்லா வகையான உணவுகளையும் கொடுக்கலாம்.(உதாரணமாக குளிர்ந்த உணவுகள் சூடான இனிப்பான)

6.அதிக நேரம் கண் விழித்தல் கூடாது.சீரான அமைதியான தூக்கம் அவசியம்.

7.பிள்ளைக்கு தேவையற்ற மன அழுத்தங்களை தவிர்க்க வேண்டும்.

  1. வலிப்பின் போது பிள்ளையை இடது புறமாக சரித்து வளர்த்துதல் வேண்டும்.
  2. பிள்ளைக்கு தொடர்ச்சியாக ஐந்து நிமிடங்களுக்கு மேலாக வலிப்பு இருக்குமானல் இடதுபுறமாக சரித்தவாறு தூக்கி உடனடியாக வைத்தியரை நாட வேண்டும்.
  3. வலிப்பின் போது பிள்ளையை தூக்கி தோலில் போடுதல் அல்லது நிமிர்த்தி வைத்தல் கூடாது.
  4. வலிப்பின் போது வாயினால் நீர்,பால் மற்றும் மருந்துகள் கொடுத்தல் ஆபாத்தானது ஏனெனில் அவை சுவாசத்தொகுதியினுள் செல்வதனால் உயிர் ஆபத்துகள் ஏற்படலாம்.

Related posts

மரணம் என்னும் தூது வந்தது!

Thumi202121

T-20 உலகக்கோப்பை 2021 அணிகளின் அலசல் – 03

Thumi2021

குறுக்கெழுத்துப்போட்டி – 30

Thumi202121

Leave a Comment