இதழ் 35

விநோத உலகம் – 01

அணில் சேகரித்த 160 கிலோ வால்நட்

அமெரிக்காவின் வடக்கு டொகோட்டோ மாகாணத்தை சேர்ந்தவர் பிஸ்ஸர். இவரது வீடு வால்நட் மரங்களால் சூழப்பட்டது. இவரது பழைய கார் எங்கு நிறுத்தப்பட்டாலும் அதன் அடில் வால்நட் குவியாலாக காணப்படுவது வழக்கம். சமீபத்தில், நான்கு நாட்கள் வெளியூர் சென்ற பிஸ்ஸர் வீடு திரும்பிய போது கார் என்ஜின் உட்பட பல இடங்களில் வால்நட்கள் சிதறிக் காணப்பட்டன. இதனை செய்தது யார் என பிஸ்ஸர் துப்பறிந்த போது ஒரு சிவப்பு நிற அணில், குளிர் கால சேமிப்புக்காக இவற்றை சேகரித்துள்ளது என்பதை கண்டுபிடித்தார். இதனை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார் பிஸ்ஸர். இந்தப் பதிவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததுடன் ஒரு அணில் நான்கே நாட்களில் சுமார் 160 kg வால்நட்களை சேமித்தது பெரும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பீட்சா சாப்பிட பெண்களுக்கு தடை

மத்திய கிழக்கு நாடான ஈரான் நாட்டின், ஐ.ஆர்.ஐ.பி., எனப்படும், இஸ்லாமிய ஈரான் குடியரசு ஒளிபரப்பு துறை, தொலைக்காட்சியில் தோன்றும் பெண்களுக்கான விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் வெளியிட்டு உள்ளது.

அந்த உத்தரவில், தொலைக்காட்சிகளில் தோன்றும் பெண்கள், சிவப்பு நிறத்திலான எந்தவொரு உணவையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது எனவும் பெண்கள் கைகளில் கையுறைகளை அணிய வேண்டும் எனவும் பீட்சா, சாண்ட்விச் போன்ற துரித உணவுகளை சாப்பிடுவது போன்று தங்களை காட்டிக் கொள்ளக் கூடாது எனவும் பெண்களுக்கு தேநீர் கொடுப்பது போன்ற காட்சிகளில் ஆண்கள் நடிக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகக் கொடுர பறவைகளை வளர்த்த ஆதிமனிதர்கள்புதிய ஆய்வில் தகவல்

வடக்கு அவுஸ்திரேலியா மற்றும் நியூ கினியா ஆகிய பகுதிகளில் காணப்படும் காசாவரி (Cassowary) எனும் மனிதர்களை கொல்லக்கூடிய ஆக்ரோஷமான பறவைகளை சுமார் 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் கோழிகளை போல வளர்த்ததாக அமெரிக்காவின் பென் ஸ்டேட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவுத்துள்ளனர். நியூ கினியாவில் ஆதிமனிதர்களின் குகைகளில் கண்டெடுக்கப்பட்ட காசாவரி முட்டை ஓடுகள் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளதாக தெரிவுத்துள்ளனர். முட்டை ஓடுகளில் காணப்படும் தீ அடையாளங்கள் அவை வேக வைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுகின்றன. மற்றும் சில பிந்திய கருக்கட்டப்பட்ட முட்டைகள் குஞ்சு பொரிப்பதற்க்காக சேகரிக்கப்பட்டுள்ளன. காசாவரி குஞ்சுகள் இறைச்சி மற்றும் இறகுகளுக்காக வளர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் காசாவரி இறகுகள் சம்பிரதாய ஆடைகளுக்காக சேகரிக்கப்படுவதோடு காசாவரி இறைச்சி நியுகினியாவின் சுவைகளின் கிரீடமாக கருதப்பட்டது.

செவ்வாய் கிரகத்தில் ஆறு, ஏரி இருந்ததற்கு அடையாளங்கள்படம் எடுத்து அனுப்பிய நாசாவின் ரோவர்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக  நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆறு, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் இருந்ததற்கான அடையாளங்களை படம் பிடித்து அனுப்பியுள்ளது.

நாசா அந்த படங்களை டுவிட்டரில் வெளியிட்டு, ‘‘விண்வெளியில் இருந்து, செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வரும் பெர்சவரன்ஸ் ரோவர், நீர்நிலையுடன் இருந்த ஜெசேரோ பள்ளத்தாக்கின் கடந்த காலத்தை பற்றிய அற்புதமான குறிப்புகளை எங்களுக்கு தந்தன. புவியியல் குறித்த இந்த ஆச்சரியங்கள் விஞ்ஞானிகளை உற்சாகமடைய செய்துள்ளது’’ என தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய்கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்தனவா என்பதை ஆராய அங்கிருந்து பாறை மற்றும் மண் துகள்களை சேகரிப்பதே பெர்சவரன்ஸ் ரோவரின் முக்கியமான பணியாகும்.

ஆனால் பாறை துகள்களை சேகரிக்கும் பெர்சவரன்ஸ் ரோவரின் முதல் முயற்சி தோல்வியில் முடிந்ததாக கடந்த ஆகஸ்டு மாதம் நாசா அறிவித்தது. எனினும் கடந்த மாத இறுதியில் செவ்வாய்கிரகத்தின் ஜெசேரோ பள்ளத்தாக்கில் இருந்து 2 பாறை துகள்களை பெர்சவரன்ஸ் சேகரித்தமையும் குறிப்பிடத்தக்கது.

மீன் சாப்பிடும் போட்டிநான்காவது முறை சம்பியனான Otis எனும் கரடி

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் நடைபெற்ற 12 கரடிகள் பங்கேற்ற கரடிகளுக்கான மீன் சாப்பிடும் போட்டியில் Otis எனும் கரடி நான்காவது முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இந்தக் கரடியின் பெயரில் நன்கொடையாக நிதி திரட்டப்பட்டு கரடிகளை பாதுகாக்கும் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

Related posts

குரும்பைகள் உதிரலாமா?

Thumi202121

ஈழச்சூழலியல் 21

Thumi202121

நம்பினால் நம்பியும் அறிவாளி

Thumi202121

Leave a Comment