இதழ் 46

கேள்வியின் நாயகனே..

ஈராயிரம் ஆண்டுகள் நீண்ட வரலாற்றை கொண்ட தமிழ் செய்யுள்கள், கவிதைகள், பாடல்கள் மூலமாகவே வரிவடிவில் வளர்ந்து தொடர்ந்து தன் அடையாளத்தை நிலை நிறுத்தியிருக்கிறது. இறைவனை பாட்டுடைத் தலைவனாக கொண்டு தேவாரங்கள், பக்தி கீதங்கள் இசைத்தமிழாய் செழிக்க மன்னர்கள் புகழ்களை வியந்து ஆட்சி பீடமும் கண்டது தமிழ். காதல் ஊறி இலக்கியங்களாகவும் தவழ்ந்த தமிழ் பல நூற்றாண்டுகளாய் உயர் தட்டு வர்க்கம் மட்டுமே உரிமை கொண்டாடும் பொக்கிஷமாகவே இருந்தது.

தமிழை எளிய மக்களுக்காக முதன்முதலில் வளைத்தவன் பாரதி. பாரதியை தொடர்ந்து குருவின் பணியை பாரதிதாசனும் தொடர்ந்தான். ஆனால் தமிழையும் கவிதைகளையும் எளிய மக்களுக்கு மிக மிக அருகில் கொண்டுவந்தவன் கவியரசு கண்ணதாசன் தான். தமிழர்கள் அத்தனை பேருக்கும் புரியும் மொழியில் தமிழையும் கவிதைகளையும் ஒவ்வொருவரது செவிகள் வரை கொண்டு சேர்த்தவன் அவன்.

kannadasan - Twitter Search / Twitter

இத்தகைய பெரிய புரட்சிக்கே சொந்தக்காரன் தன்னை பற்றி இப்படி எழுதியிருக்கிறான்,

// காவியத் தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந் தலைவன்
பாமர ஜாதியில் தனி மனிதன் நான்
படைப்பதனால் என் பேர் இறைவன்//

படைப்பதனால் என் பெயர் இறைவன் என்று சொல்லிச் சென்றதனால் தானோ என்னவோ அவனை தொடர்ந்து திரைப்பாடல்கள் எழுத வந்த அத்தனை கவிஞனும் அவனிடம் உதவி கேட்காமல் எழுத தொடங்குவதில்லை.

kannadasan - Twitter Search / Twitter

***********

தன்னை பற்றிப் புகழ்ந்து பாடும் தன் காதலனை ‘கண்ணதாசனாக’ பாவித்து ஒரு காதலி இப்படி எழுதுகிறாள்.

‘கண்ணதாசா கண்ணதாசா வருவாயா
என் விழியோரமாய் மை எடுப்பாயடா
என் இதழ் மீதிலே கவி வடிப்பாயடா
என்ன மெச்சு மெச்சு லச்சம் லச்சம் பாட்டு மீண்டும் பாடு”

இன்னொரு காதலி தான் எழுதிய காதல் கடிதத்தை திருத்தி மெருகூட்ட ‘கண்ணதாசனை” அழைக்கிறாள்.

‘கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு
என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு”

Rare photographs of Jayakanthan | Chennai First

ஒரு காதலனோ தன் காதலியே கண்ணதாசனின் கவிதைக்கு சமானமானவள் என்கிறான்.

‘காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ
நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்”

இன்னொரு கவிஞன் இன்னும் மேலே போய், அழகான கவிதை போல் இருக்கும் தன் காதலியை படைத்ததனால் பிரம்மன் கூட கண்ணதாசன் போல நல்ல கவிஞன் என்கிறான். பிரம்மனை விட கண்ணதாசன் மேலானவன் என்றும் பதிவு செய்கிறான்.

‘பிரம்மன் கூட ஒரு கண்ணதாசன் தான் உன்னை படைத்ததாலே”

காதலையும் காதலியையும் கொண்டாட கண்ணதாசனை தேடியவர்கள், காதலில் தோற்ற பின்பும் தங்களை தேற்ற அதே கண்ணதாசனை தான் நாடுகிறார்கள்.

‘காதல் ராணி இல்லையே கலந்து மகிழவே
கண்ணதாசன் இல்லையே கவிதை எழுதவே”

என்று ஒருவன் புலம்ப, இன்னொருவன்

‘என்னை பத்தி கவி எழுத கண்ணதாசன் இல்லையே”

நெஞ்சம் மறப்பதில்லை 18 - எம்.ஜி.ஆர்.- சிவாஜி படத்துக்கு ஒரு பாட்டால் வந்த  பிரச்சினை! | Nenjam Marappathillai 18 - Tamil Filmibeat

***********

இப்படியாக பின் வந்த கவிஞனெல்லாம் அவனை தங்கள் முன்னோடியாக்கி கொண்டாடிக் கொண்டிருக்க, அவனோ தான் வாழ்ந்த வாழ்க்கையை இப்படியாக பதிவு செய்திருக்கிறான்.

//ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு//

கவிஞன் போதைக்கு அடிமையாகியிருந்தாலும் தமிழ் அவன் சிந்தனை முழுதும் நிரம்பி ததும்பியது அவன் பெற்ற வரம். எவ்வளவு போதையிலும் வாழ்வின் எவ்வளவு பெரிய தத்துவத்தையும் எழுதும் வல்லமை அவன் ஒருவனுக்கே கிட்டிய கொடை. அதனை இப்படி ஒரு கவிஞன் பதிவு செய்கிறான்,

‘கனவில் மட்டும் கட்டி அணைத்தால் காதல்
வருமா கன்னிக்கு
கவி கண்ணதாசன் போல் தண்ணியடித்தால் கவிதை வருமா கழுதைக்கு”

வராது என்பதை தனியாக சொல்ல வேண்டுமா என்ன? ஆனால் கண்ணதாசனை குடிகாரர்கள் சொந்தமாக்கி கொண்டார்கள்.

‘கண்ணதாசன் காரைக்குடி பேரைச் சொல்லி ஊத்திக்குடி”

குடித்த பின் சிந்தும் தத்துவ முத்துக்களுக்கும் கண்ணதாசன் சொந்தமாகிப்போனார்.

‘மீன் செத்த கருவாடு நீ செத்த வெறும் கூடு கண்ணதாசன் சொன்னதுங்க
பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும் நான் கண்டு சொன்னதுங்க”

குடிகாரன் தத்துவம் என்றாலும் அத்தனையையும் வேதவாக்காக வந்து விழுந்தது அதிசயம்.

‘கண்ணதாசன் சொன்னாங்கோ வைரமுத்து சொன்னாங்கோ
ஊனம் என்பது மனசு தான்னு உனக்கும் எனக்கும் சொன்னாங்கோ”

தமிழை எளிமையாக்கி சொற்களை வைத்து விளையாடி பல்லாயிரம் பாடல்களில் காதல் ரசம் பொழிந்து தத்துவம் பேசி சிரிக்கும் போது சிரித்து அழும் போது தேற்றும் பாடல்களை தமிழர்களுக்காய் அள்ளி வழங்கிய கவிச்சக்கரவர்த்தி தன்னை இப்படியாக முன்மொழிந்திருக்கிறான்.

//மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர்
மாண்டுவிட்டால் அதை பாட்டில் வைப்பேன் நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை//

கவிஞரும் கர்மவீரரும் | கண்ணதாசன்

எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி அவன்.

ஒவ்வொரு நொடியிலும் உலகின் எங்கோ ஒரு மூலையில் அவன் பாடல்கள் இசைக்கப்படுகின்றன. ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ தொடர்ந்தும் வாசிக்கப்படுகிறது. ‘இயேசு காவியம்’ இன்னும் புதுவாசம் வீசுகிறது. இன்றும் அவனை தொட்டே பாடல்கள் எழுதப்படுகின்றன.

”சொற்களிலே வித்தகராம் கண்ணதாசன் அவள் தொட்டதனால் ஆகிவிட்டேன் வண்ணதாசன்”

அவன் நிரந்தரமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் அவனுக்கு மரணம் இல்லை.

Related posts

வீண் செலவுகளை தவிர்ப்போமேன்!

Thumi202121

பெண்ணே…….!

Thumi202121

என்னவன் அவன்

Thumi202121

Leave a Comment