சேற்றிலே முளைத்தினும் செந்தாமரை என்றதும் பொய்த்தது…
எங்கு செல்கினும்
நதிபோல வளைந்திடும்
நினைவுகள்
கடல் ஓடிச்சென்றிட துடிக்குமே.
நரகத்தின் விளிம்புவரை அனுப்புகின்றாய்.
போகவும் மறுக்கின்றாய்.
சொர்க்கமும் அழைத்திட விரும்புகிறாய்.
ஏற்கவும் வெறுக்கின்றாய்.
ஏனெனில் கால்கள் பவளமில்லை.
எனக்கு தேவையானதெல்லாம்
பதுக்கிவைக்கும் பணமும் இல்ல.
உருக்கிப்போடும் நகையும் இல்ல.
அடுக்கி சேர்க்கும் சொத்தும் இல்ல.
வழிபோகும் பாதையெங்கினும்
தள்ளிப்போகா
இன்பம்.
பிரிவில் வாழும்
இந்த தண்டவாளம் போல்…
பிரிந்திட்ட வாழ்வும் நன்று
ஏனெனில்
புகைவண்டி வாழுமல்லவா….
நம் நினைவுகள் நீளுமல்லவா…
அமைதி நான் கொடுப்பேன்
கலங்கிடாதே ….
என் வழி தெரியவில்லை
என் இரட்டைப்பாதம்
விரும்பும் திசையே என்
மனம் செல்லத் தெரியும்…….
ஏனெனில் என் கால்கள் பவளமில்லை.