இதழ் 49

ஈழச்சூழலியல் 35

அல்கா மலர்ச்சி

அல்கா மலர்ச்சி என்பது நுண் தாவரத் தொகுதியின் திணிவு தெளிவாக கண்ணுக்குப் புலப்படும் வகையில் அடர்த்தியாக இருக்கும் நிலையாகும். அதிகமான மலர்ச்சிகள் அல்காக்களினால் ஏற்படுவதனால் இம்மலர்ச்சி பொதுவாக அல்கா மலர்ச்சி எனப்படும். அபிவிருத்தியடைந்த நாடுகளில் காணப்படும் தொழிற்சாலை நடவடிக்கைகள், செறிவான பயிர்ச்செய்கைகள், விலங்குப்பண்ணைகள் காரணமாக அந்நாடுகளிலேயே அல்கா மலர்ச்சி என்பது பிரதானமாக முதன்முதலாக அறிமுகமானது. இதற்கு 1960 இல் Erie குளத்தில் ஏற்பட்ட அல்கா மலர்ச்சி யாவரும் நன்கறிந்த உதாரணமாகும். 1991 இல் அவுஸ்ரேலியாவில் Darling ஆற்றில் ஏற்பட்ட பாரிய அல்கா மலர்ச்சி காரணமாக ஆற்றின் 1000 கிலோ மீட்டர் வரை பாதிக்கப்பட்டதுடன் New South Wales அதிகாரிகளினால் 21 நாட்களுக்கு அவசரகால நிலமையை பிரகடணம் செய்ய நேர்ந்தது.

கடந்த 20 வருட காலத்தில் கொத்மலை, மவுசாக்கலை, கிரிதலே, பராக்கிரம சமுத்திரம், உல்கிடிய, கந்தலம, காசல்ரீ, ராஜாங்கன, நாச்சாதுவ, திஸ்ஸவெவா, நுவரவெவா, போன்றவற்றில் அல்கா மலாச்சி பாரியளவில் காணப்பட்ட்ளளது. இலங்கையின் உலர் வலையத்தில் காணப்படும் சில சிறிய அளவிலான நீர் நிலைகள் வரண்ட காலத்தில் அல்காவினால் மூடப்படுகின்றன.

அல்காவின் ஒளித்தொகுப்பு 1981 ல் ஸ்ரம் (Stumm) மற்றும் மோர்கன் (Morgan) என்பவர்களினால் விருத்தி செய்யப்பட்டபின்வறும் சமன்பாட்டால் விளங்கப்படுத்தலாம்.

106CO2 +16NO3 + HPO4 +122H2O +18H+ = C106H263O110N16P + 138O2

நைதரசன், பொசுபரசின் அனுத்திணிவு முறையே, 14, 31 ஆக கொள்ளும் போது அல்காவில் காணப்படும் நைதரசன், பொசுபரசின் திணிவு விகிதமானது 16×14/1×31=7.2 ஆகும்.

பொதுவானதொரு வழிகாட்டியாக நீரில் நைதரசனின் செறிவு பொசுபரசின் செறிவை விட 10 மடங்கு அதிகரித்து இருக்குமாயின் அந்நீரில் அல்கா வளர்ச்சி பொசுபரசினால் மட்டுப்படுத்தப்படும். அதே போல் N 😛 உள்ள விகிதாசாரம் 10 ஐ விடக் குறையுமாயின் அல்காவின் வளர்ச்சி நைதரசனால் மட்டுப்படுத்தப்படும்.அல்கா மலர்ச்சியானது, நீந்துதல் போன்ற நீர்விளையாட்டுக்களுக்கு தடையாக இருக்கும்.அல்கா நீரில் காணப்படுமாயின் நீர் ஒத்துவராத நிறத்தையும், விரும்பத்தகாத மணத்தையும், ஏற்றுக்கொள்ள முடியாத சுவையையும் தருமாகையால், குடிநீராக பயன்படுத்துவதற்கு நீரை விசேடமான சுத்திகரிப்பு முறைகளுக்கு உட்படுத்த வேண்டும். மேலும் அல்காக்கள் குழாய்களை அடைத்து வடித்தல் செலவை அதிகரிக்கச் செய்யும். அல்காக்களின் கலங்களில் இருந்து சுரக்கப்படும் பதார்த்தங்கள் நீரில் கிருமிகளை அழிக்க பயன்படுத்தபடும் குளோரினுடன் சேர்ந்து டிரைக்லோ மெதேன் என்ற பதார்த்தத்தை உருவாக்க முடியும். இப்பதார்த்தம் புற்று நோயைக் ஏற்படுத்தும் பதார்த்தமென இனங்காணப்பட்டுள்ளது.அல்கா மலர்ச்சி அதன் சிதைவடைதலுக்காக நீரில் உள்ள ஒட்சிசனை பாவிப்பதால் நீரின் ஒட்சிசன் குறைவடைந்து மீன்களின் இறப்புக்கு வழிகோலும். அதே நேரம் அல்கா சிதைவடையும் போது நச்சுப்பதார்த்தங்களும் உருவாகின்றன. அமில மழைக்குப் பங்களிப்புச் செய்யக்கூடிய டைமீதயில் ஸல்பைட் (Dimethyl Salphide) என்ற பதார்த்த்தையும் இது உருவாக்குகின்றது

அல்காக்களினால் உருவாக்கப்படும் நச்சப்பதார்த்தங்கள்.

நீர்தேக்கங்களில் பல வகையான நீல-பச்சை அல்காக்கள் காணப்படினும் அவற்றுள் ஒரு சில மட்டுமே நச்சுப்பதார்த்தங்களை உருவாக்குகின்றன. அவைகளாக அனபீனா (Anabeana), மைக்குரோசிஸ்டிஸ் (Microcystis), சிலின்ட்ரோஸ்பேர்மெப்சிஸ்(Cylindrospermopsis) லிங்பியா (Lyngbia) ஒஸ்ஸிலாடோரியா (Oscillatoria) நொடுலோரியா (Nodularia) போன்றவற்றைக் குறிப்பிடலாம். சில நச்சுப்பதார்த்தங்கள் மனிதனுக்கும், விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியன. தோல் அழற்சி, டோர்மடைடிஸ், சமிபாட்டுக் கோளாறுகள், வயிற்று வலி, வாந்தியெடுத்தல் என்பன மனிதனுக்கு ஏற்படும் நோய்களின் அறிகுறிகளாகும். இன்னும் சில நச்சுப்பதார்த்தங்கள் சிறுநீரகம், ஈரல் என்பவற்றில் தாக்கம் ஏற்படுத்தும். சைனட்டை விட 1000 மடங்கு நச்சுத்தன்மையுடைய மைக்கிரோசிஸ்டின் (Microcytis LR) என்ற பதார்த்தம் அல்காக்களினால் உருவாக்கப் படுகினறதொன்றாகும். சில நச்சுப்பதார்த்தங்கள் நிறமற்றவை அத்துடன் அல்காக்களை முற்றாக அழித்த பின்பும் சில வாரங்களுக்கு அதன் நச்சுத்தன்மை உயிர்ப்புடன் இருக்கும். நீரைக் கொதிக்க வைப்பதன் மூலம் இவற்றை அழிக்க முடியாது. நீர் நிலைகளில் காலத்துக்கு காலம், இடத்துக்கு இடம் நச்சுப்பதார்த்தங்களின் அளவு வேறுபடுவதனால் அல்கா மலாச்சியால் ஏற்படும் நச்சுத்தன்மையை சரியாகக் கணித்து கூற முடியாது.

1991 இல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மைக்குரோசிஸ்டிஸ் அரிகினோசா அல்கா மலாச்சி ஒரு படையாக முற்றாக மூடியது. நீரேந்தும் பகுதிகளில் உள்ள பாற்பண்ணை மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வரும் போசனைப் பதார்த்தங்களால் இது ஏற்பட்டது எனக்கூறலாம். கடைசி மன்னனால் கட்டப்பட்ட (1810-1812) கண்டி குளத்தில் 1999 இல் சயனோபக்டீரியம் இனமான மைக்குரோசிஸ்டிஸ் அரிகினோசாவின் நச்சுப் பொருள் விடுவிக்கும் சில அல்காக்கள் மலாச்சி காணப்பட்டது. இக்குளம் 1 ஹெக்டேயர் பரப்பளவையும் 3.25 km சுற்றளவையும் கொண்டுள்ளது. அதி கூடிய 13 மீற்றர் ஆழத்தையும் 2.348 MCM கொள்ளளவையும் கொண்டது. கண்டி நகரிலிருந்து கழிவு நீரானது 28 இடங்கள் மூலமாக குளத்தை அடைகிறது. அடிப்படை ஆரய்ச்சிக்கான நிறுவனம் (IFS) 1997-2002 காலப்பகுதியில் நடாத்திய ஆய்விலிருந்து நீரியல் சம்மந்தமான முழுத் தகவல்களையும் தொகுத்துள்ளது. உயர்BODபெறுமானமாக 56 mg/L காணப்படுவது குளம் அதிகம் மாசடைந்துள்ளதைக் காட்டுகிறது. இக் குளத்தில் உள்ள நீரை வரட்சிக்காலத்தில் குறைப்பது குளத்தின் அடியில் ஆழமான படையில் காணப்படும் பொசுபரசை M.aerugenosa அல்காவிற்குப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதால் அதன் உயிர்த்திணிவு மலர்ச்சிக்குறிய அளவுக்கு அதிகரித்துச் செல்கிறது.

2013 ஆம் ஆண்டு ஜனவரி 26 ம் திகதி உல்ஹிட்டிய நீர்தேக்கத்தில் ஒரு அல்கா மலர்ச்சி ஏற்பட்டது. இந்த அல்கா முக்கியமாக நச்சுத்தன்மையை உண்டாக்கும் மைக்குரோசிஸ்டிஸ் (Micricystis) என இலங்கை அடிப்படைக் கல்விக்கான நிறுவனம் இனங்கண்டது.

ஆராய்வோம்……….

Related posts

சித்திராங்கதா – 47

Thumi202121

இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது — 2022

Thumi202121

கனகராயன் ஆறே பாய்ந்திடு

Thumi202121

Leave a Comment