உலகில் தவிர்க்க முடியாத ஓர் ஆளுமையாக அனைவராலும் நோக்கப்படும் ஜனாதிபதி செலன்ஸ்க (Volodymyr zelenskyy ) ஆவார். போராடி தோல்வியடைந்தாலும் தோல்வி அடைவோமே தவிர ஒருபோதும் ரஸ்யாவிடம் சரணடைய மாட்டோம் என்று வல்லரசு நாடுகளுடன் எதிர்ச்சமர் புரிந்து வருபவர் தான் இந்த உக்ரேனுடைய ஜனாதிபதி. நவீன உலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாக தலைவர்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்த ஒரு தலைவராகவும் ரஸ்யாவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்குகின்ற தலைவராக செலன்ஸ்கி ஜனாதிபதி விளங்குகின்றார.; இவர் உக்ரைனின் ஆறாவது ஜனாதிபதியாவதுடன் 2019 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை உக்ரைனின் ஜனாதிபதியாக கடமையாற்றி வருகின்றார். இவர் 1978ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதி உக்ரைனில் உள்ள Kryvyi rih ( Ukranian SSR Soviet Union ) என்ற இடத்தில் பிறந்து இருக்கிறார.; இவருடைய தந்தையின் பெயர் Oleksandr Zelenskyy இவர் ஒரு பேராசிரியராக மற்றும் கணினி விஞ்ஞான துறையின் தலைவராகவும் பணியாற்றியிருக்கின்றார;( Kryvyi Rih State University of Economics and Technology). இவருடைய தாயார் Rymma Zelenska. இவர் ஒரு பொறியியலாளராகும். இவர் Kyiv National Economic Universityல் LLB பட்டம் முடித்துள்ளார். இவர் 1.7 மீட்டர் உயரம் உள்ளதுடன் உக்ரைன் தேசியத்தினை அடையாளமாகவும் கொண்டு விளங்குகின்றார். 2003ஆம் ஆண்டு Olena Zelenska என்பவரை திருமணம. செய்து கொண்டார். அத்துடன் இவருக்கு இரண்டு குழந்தைகள் காணப்படுகின்றார்கள. மகள் Oleksandra மகன் Kyrylo. இவர் ஆரம்பத்தில் ஒரு தொலைக்காட்சி நகைச்சுவை நடிகராகவும் பணியாற்றியிருந்தார். தற்சமயம் இவர் சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதியாக பணியாற்றுகின்றார். அத்துடன் தற்சமயம் Mariinskyi palaceல் வசித்து வருகிறார.;
இவர் பிறந்த பொழுது நோக்கினால் அது ரஸ்யாவுடன் ஒன்றித்து உக்ரைன் காணப்பட்டு இருந்தமையால் இவருடைய தாய்மொழியாக ரஸ்யன் மொழியே விளங்கியிருந்தது. 1990ஆம் ஆண்டுகளில் ரஸ்யாவில் இருந்து பிரிந்தது. அதிலிருந்து இவர் உக்ரைனில் வாழத் தலைப்பட்டார் இவர் தன்னுடைய நடிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த ஒருவராக விளங்குகின்றார.; ஒரு சமயம் தொலைக்காட்சியில் நடக்கும் நாடகத்தின் பொழுது உக்ரைன் ஜனாதிபதியாக வேடமேற்று நடித்திருந்தார். அதேபோன்று பிற்பட்ட காலம் உத்ரைன் ஜனாதிபதியாக வந்துள்ளார.; உக்ரைனில் பல்வேறு பணிகளை ஆற்றிய ஒரு நபராக காணப்படுகின்றார். டுநுயுபுருநு ழுகு டுயுருபுர்வுநுசு என்ற தொண்டு அரச சார்பற்ற நிறுவனத்தினையும் ஸ்தாபித்து இருக்கின்றார். 30க்கு மேற்பட்ட தேசிய தொலைக்காட்சி விருதுகளையும் இவர் பெற்றிருக்கின்றார் அதில் ஒன்றாக உக்ரைன் தொலைக்காட்சி உயர் விருதான LEAGUE OF LAUGHTER விருதினையும் இவர் பெற்றிருக்கின்றார்.
உக்ரைனானது தன்னுடைய ஒரு பிராந்தியம் எனக்கூறி ரஸ்யா உக்ரைன் மீது படையெடுப்பு மேற்கொண்டது அந்தப் படையெடுப்பு தொடர்பாக பல்வேறு உலக நாடுகளின் போரியல் நிபுணர்கள் கருத்து கூறுகின்ற போது போர் தொடுத்து குறுகிய நாட்களில் நடைபெற்று முடிந்துவிடும் என்றும் ரஸ்யாவானது மிக இலகுவாக வெற்றி அடைந்து விடும் என்றும் குறிப்பிட்டிருந்தனர.; ஏனெனில் ரஸயாவுடன் நோக்கும் போது உக்ரைனானது ஒரு மிகச் சிறிய நாடாக காணப்படுவதுடன் தனது அதிதிறமையுடனும் மற்றும் அதிநவீன ஆயுதங்களுடன் அணுவாயுத பலத்துடனும் காணப்படுகின்ற ஒரு நாடாக ரஸ்யா விளங்கி இருந்தமையால் போரில் வெற்றியடைந்து விடும் என்றனர். இருப்பினும் இன்று வரைக்கும் ரஸ்யாவுடன் எதிர் நிலை நின்று போர் புரிவதற்கு பிரதான காரணியாக அமைந்தது இந்த உக்ரேனிய ஜனாதிபதி அவருடைய துணிவும் நம்பிக்கையும ஆகும். தேசியத்தைப் பேணிய மக்களிணையம் இராணுவத்தினரையும் ரஸ்யாவிற்கு எதிராக போராட வைத்ததுடன் ரஸ்யாவின் மிலேச்சத்தனமான ஆக்கிரமிப்பினை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். ஊக்ரேனியர்கள் அனைவரையும் ரஸ்யாவிற்கு எதிராக அணி திரட்டி போரிட்டு கொண்டிருக்கின்றார். அந்த வகையில் உலக நாடுகளின் தலைவர்கள் இன்று கவனமாக உற்று நோக்குகின்ற தலைவர்களில் இந்த உக்ரேன் ஜனாதிபதி செலன்ஸ்கியும் முக்கியமான இடத்தினைப் இருக்கின்றார.; அவர் பல்வேறு நாடுகளிடமிருந்து கடன்களையும் பல்வேறு நவீன ஆயுதங்களையும் பெற்று ரஸ்யாவிற்கு எதிராக ஓர் போர் கட்டமைப்பினை ஒரு போரியல் தந்திரோபாயத்தை மேற்கொண்டு ரஸ்யாவினுடைய போரியல் முறைகளை தகர்த்துக் கொண்டிருக்கிறார.;
இதற்கு பிரதான காரணமாக அமைந்தது ஒரு தலைமைத்துவத்தின் வெளிப்பாடாகக் காணப்பட்ட முடிவெடுக்க என்ற அவருடைய திடமான நம்பிக்கை ஆகும். பல்வேறு நாடுகளின் ஆக்கிரமிப்பிற்கு உட்படுகின்றன சில சந்தர்ப்பங்களில் அந்த ஆக்கிரமிப்பிற்கு உட்படுத்தும் நாடுகளிடம் மண்டியிடுவது வழக்கம் ஆனால் இன்று வரைக்கும் ரஸ்யாவுடன் போர் புரிவதையே தன்னுடைய இறுதி முடிவாக கருதிக் கொள்கிறார். இதற்கு அவருடைய தீர்மானமானது மிகவும் பிரதானமானது. தொலைக்காட்சியில் ஒரு நகைச்சுவை நடிகனாக நடித்ததைப் போன்று அரசியலிலும் இவர் ஒரு நகைச்சுவையான இருக்கக் கூடும் என்று சிலர் கருதினாலும் அரசியலில் ஒரு திடமான நபராக முடிவெடுப்பதில் வெற்றி கண்டு இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. அதாவது பல்வேறு நாடுகளும் ஆதரவு கொடுக்கத் தயங்கிய போதும் அந்த நாடுகளை எல்லாம் தன் பக்கம் கவர்ந்து இழுப்பது இவர் பெற்ற வெற்றியாக காணப்படுகின்றார.; ஏனெனில் இன்று ஐரோப்பிய தேசங்கள் அனைத்தும் ஆதரவு கொடுக்காதுவிட்டால் இலகுவாக ரஸ்யாவின் பிராந்தியமாவதற்கான வாய்ப்பு காணப்பட்ட போதும் அதனை தடுப்பதில் இவர் வெற்றி கண்டிருக்கிறார.; இவரது தேசிய உணர்வும் தேசியம் மீதான ஈர்ப்பும் இன்றும் ரஸ்யர்களார்களால் கைப்பற்ற முடியாத ஒரு திடகாத்திரமான தேசமாக வைத்திருப்பதற்கு உதவி இருக்கிறது என்றால் அது மிகையாகாது.
உக்ரேனிய ஜனாதிபதியிடமிருந்து உலகத்தின் பல தலைவர்கள் பல்வேறு அம்சங்களை கற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாக காணப்படுகின்றார்கள.; ஏனெனில் ஒரு வல்லரசு நாட்டினை எளிதில் எதிர்த்து நிற்பது என்பது சாதாரண விடயம் அல்ல. அது உலகிலேயே அதிகமான நிலப்பரப்பினை கொண்ட நவீன ஆயுதங்களைக் கொண்ட ரஸ்யாவினை எதிர்த்து நிற்பதற்கு இந்த செயலானது இன்றியமையாததாகின்றது. ரஸ்ய – உக்ரைன் யுத்தம் ஒரு வரலாற்று நிகழ்வாக காணப்பட்ட போதும் பல்வேறு அழிவிற்கும் மனித உயிரிழப்புக்கும் காரணமாக அமைந்து விடுகின்றது. உக்ரைன் ஜனாதிபதி பேச்சுவார்த்தையின் ஊடாக அல்லது சமாதான வழிகளின் ஊடாக தன்னுடைய ஆளுமையை பயன்படுத்தி இந்த முரண்பாட்டை முடிவுக்கு கொண்டுவருவாரானால் அதன் பின்னும் வரவேற்கக்கூடிய ஒரு நபராக மாற்றப்படுவார.;