வஞ்சகம் புரி தாய்
வளமிகு நாடன்
அர்ச்சனை செய்தோய்
குருதியில் நிலம் பட
போர் தனை உலன்று
பசியது நீட்சியிலே
இனமென இல்லை
யார் உனைக் கொன்றார்
துப்பாக்கியில் பூத்திடா
பூக்களின் வாசனையே
ஆண்டுகள் கடந்து
ஆயின வாழ்க்கை
ஆயின போதும்
மாறுவதில்லை
மனங்களின் ஆறா
வடுக்களின் மாட்சி
இழந்தது கோடி
பிரிந்தது பாதி
பறவைகள் கூடும்
சிதைந்தது போலும்
காலங்கள் அழுந்தி
உரைக்கிறதே
உள்ளத்தில் ஓடும்
உறக்கங்கள் விழிக்கும்
ஆறுதல் கூற
அன்பினில் உதிக்கும்
நாள் வரை காலம்
கதை சொல்லட்டுமே
1 comment