பம்பைமடு (218A) எனும் பிரதேசமானது ஆனது வவுனியா மாவட்டத்திலேயே விவசாயத்தில் அதிக அளவு விளைச்சலை பெற்றுக்கொள்ளும் கிராமமாகும் இங்கு மொத்தம் 120 குடும்பங்கள் விவசாயத்தினை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர் இங்கு விவசாயத்திற்கு தேவையான நீர் வளமாக எட்டு நன்னீர் குளங்களை கொண்டு காணப்படுகின்றது.
- கல்வலி கூலாங்குளம்- 40 ஏக்கர் பெரும்போகம் 20 ஏக்கர் சிறு போகம்.
- வைகாளி கூலங்குளம்-103 ஏக்கர் பெரும்போகம் 25 ஏக்கர் சிறு போகம்.
- வள்ளிபுரம்- 35 ஏக்கர் பெறும் போகம் 15 ஏக்கர் சிறுபோகம்.
- கலியன் சாய்ந்த குலம் 50 ஏக்கர் பெரும்போகம் 10 ஏக்கர் சிறுபோகம்.
- பெருக்கு குளம்- 70 ஏக்கர் பெரும்போகம் 10 ஏக்கர் சிறு போகம்
- பெரிய கட்டுக்குளம்- 227 ஏக்கர் பெரும்போகம் 60 ஏக்கர் சிறு போகம்.
- புண்ணியன் குளம் -12 ஏக்கர் பெரும்போகம்.
- சின்ன குளம்- 12 ஏக்கர் பெரும்போகம்.
என எட்டு குளங்களை அடிப்படையாகக் கொண்டு பெரும்போகம் மற்றும் சிறுபோகம் மேற்கொள்ளப்படுகின்றது.
பம்பைமடு பகுதியானது சிறந்த நீர்வளத்தையும் நிலவளத்தையும் கொண்டுள்ளது. இங்கு நிலவளமாக இருவாட்டி மண் காணப்படுவதால் இங்குள்ள மக்கள் அதிகளவில் விவசாயம் செய்கின்றார்கள். விவசாயமாக நெற்பயிர்செய்கை(சிறுபோகம், பொரும்போகம்) நிரந்தர பயிர்செய்கை(வாழை, தென்னை, பழமரங்கள்), தானிய வகைகள்(பயறு, உழுந்து, கௌப்பி) செய்கின்றனர்கள். இவ் விவசாயத்துக்கு நீர்வளமாக காணப்படுகின்ற குளத்திலிருந்து நீரை வாய்கால்களினூடாக பெற்றுகொள்கின்றனர்கள். இங்கு குளமிருக்கும் காரணத்தால் நீர்மட்டம் மேலே காணப்படுகின்றது. மக்கள் தமது அன்றாட தேவைக்கான நீரை கிணற்றிலிருந்து பெற்றுகொள்கின்றனர்கள். இங்குவருட சராசரி மழை வீழ்ச்சி 6700 மி.மீ ற்கு குறைவாகவும் வருட சராசரி வெப்பநிலை 32 செல்சியஸ் காணப்படுவதாலும் மழை வீழ்ச்சியின் பெரும்பகுதி ஜப்பசி பிற்பகுதியிலிருந்து தை மாதம் வரை கிடைக்கின்றதாலும் அத்துடன் தரை அமைப்பானது மேடு பள்ளம் போன்று காணப்படுவதாலும் வாய்க்கால்களினூடான நீரோட்டமும் இயற்கையான மரங்களின் செழிப்பான வளர்ச்சியினாலும் மக்கள் வாழ வதற்கான சிறப்பான சூழல் காணப்படுகின்றது. மக்கள் தமது அன்றாட தேவையை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் கடைகள், வங்கி, பாடசாலைகள், அரச திணைக்களங்கள வவுனியா பல்கலைக்கழகம்; காணப்படுகின்றன.
அடையாளம் காணப்பட்ட முக்கிய தேவைகள், பிரச்சனைகள்
பம்பைமடு பிரதேசத்தில் பாரிய சவாலாக காணப்படும் பிரச்சனையாக நெல்லை காய வைப்பதற்கு நெல் தளம் இன்மையாகும். பாரிய நெல் விளைச்சலைப் பெறும் இப்பிரதேசத்தில் நெல்லினை உலர வைப்பதற்கு தளம் அவசியமாக காணப்படுகின்றது.
சந்தைப்படுத்தல் மற்றும் சுய தொழில் முனைவு என்பன முரண்பாடான நிலையில் காணப்படுகின்றன. நெல் காயவிடும் தளம் இல்லாமையால் விவசாயிகள் நெல்லிணை உடனடியாக ஏற்றுமதி செய்வதன் மூலம் நெல்சார் ஏனைய தொழில்கள் இங்கு பாதிப்புக்கு உள்ளாகின்றது பெண் தலைமைத்துவ குடும்பங்கள் நெல்சார் உற்பத்தினை அடிப்படையாகக் கொண்டே தமது ஜீவனோ பாயத்தை மேற்கொண்டு வருகின்றனர் சந்தைப்படுத்தல் மற்றும் சுய தொழில் ஊக்குவிப்பினை வழங்குமாறு மக்கள் கேட்டுக்கொண்டனர்.
பம்பைமடு பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் போதிய அளவு வருமானமின்மையினால் வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்றனர் அதனால் மாணவர்கள் பாடசாலை இடை விலகல் ஏற்படுகின்றது.
பம்பைமடு பிரதேசத்தில் காணப்படுகின்ற குளங்கள் தூர்வாரி புனரமைக்கப்பட வேண்டிய நிலையில் காணப்படுகின்றது. நீர்வளம் மிக்க பிரதேசமானது எட்டு குளங்களை அடிப்படையாகக் கொண்டு விவசாய செய்கையில் ஈடுபட்டு வருகின்றது இங்கு காணப்படுகின்ற குளங்கள் பல மாதங்களுக்கு பிறகு தூர்வாரல் சேர்ப்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குளங்கள் தூர்வாரப்பட வேண்டிய கட்டாயம் இங்கு உள்ளது.
குளங்களிலிருந்து வயல் நிலங்களுக்கு நீரை பெற்றுக் கொள்ளுகின்ற வாய்க்கால்கள் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளன. 50 வருடங்களுக்கு முன்னர் போடப்பட்ட வாய்க்கால்களே இங்கு காணப்படுகின்றன. வயல் நிலங்களுக்கு குளங்களிலிருந்து நீரினை பெற்று தரும் வாய்க்கால்கள் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது இதனை புனர் நிர்மாணம் செய்ய வேண்டிய கட்டாயம் இங்கு காணப்படுகின்றது.
பம்பை மடுக்குளம் பெரிய கட்டு குளம் கூலாங்குளம் போன்ற குளங்கள்போன்ற குளங்கள் பம்பை மடு பிரதேசத்தில் அதிகளவு நீர் கொள்ளளவை கொண்டு காணப்படுகின்றது. இக்குளங்கள் ஆழப் படுத்த வேண்டிய நிலையில் உள்ளன
வயல் நிலங்களுக்குள் காட்டு யானைகள் உட்புகுந்து விளைநிலங்களை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன. மக்களினுடைய விளைச்சலை பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் காட்டு விலங்குகள் வயல் நிலங்களுக்குள் உட்புகுந்து அவற்றினை சேதப்படுத்துகின்றன இவ்வாறு சேதப்படுத்தப்படுகின்ற வயல் நிலங்களை அடையாளம் கண்டு அவற்றிற்கு உரிய மின்சார வேலைகளை அமைத்துத் தருமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்
வவுனியா மாவட்டத்தில் முக்கிய நிறுவனமாக வவுனியா பல்கலைக்கழகம் அமைவு பெற்றுள்ள பிரதேசமாக இப்பிரதேசம் காணப்படுகின்றது. எனவே முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரதேசத்தில் அங்கு வாழும் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர். அவர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளில் அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் பாரிய சவாலாக காணப்படும் பிரச்சனையாக நெல்லை காய வைப்பதற்கு நெல் தளம் இனிமையாகும். பாரிய நெல் விளைச்சலைப் பெறும் இப்பிரதேசத்தில் நெல்லினை உலர வைப்பதற்கு தளம் அவசியமாக காணப்படுகின்றது. விவசாயிகள் நெல்லிணை அறுவடை செய்த பிற்பாடு நெல்லினை பச்சையாக ஏற்றுமதி செய்கின்றனர்.இதன்மூலம் பொருளாதார ரீதியில் நட்டம் ஏற்படுகின்றது அதே நேரம் நெல் தளம் காணப்படும் போது மக்கள் நெல்லினை உலர வைத்து பயன்படுத்துவதோடு அதிகளவு இலாபத்தினையும் பெறமுடியும்.அதே நேரம் நெல்சார் சுயதொழிலை மேற்கொண்டு தமது வாழ்வாதார நடவடிக்கைமூலம் வரும் வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும்.நெற்தளம் ஆனது 50-70 வருடங்கள் வரை நிலையானதாகவும். அதே நேரம் கிடைக்கப்பெறும் வளத்தினை நீண்ட கால பாவனைக்கு மக்கள் முறையாக பயன்படுத்துவதுடன் இதன்மூலம் அனைத்து மக்களும் பயன் பெறக்கூடியதாகவும் இருக்கும்.
நெல் தளத்தினை அமைப்பதன் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரத்தில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்களாக.
- 2024 ஆம் ஆண்டளவில் பம்பைமடு கிராமத்தின் வறுமையை 70% மாகக் குறைத்தல்.
- பம்பைமடுக் கிராமத்தின் விவசாய விளைச்சலின் விற்பனை விலையை அதிகரித்து வருமான விரயத்தினை 80% மாகக் குறைத்தல்.
- விவசாய குடும்பங்கள் வருமானத்தைக் கொண்டு நல் வாழ்க்கையை வாழக்கூடிய நிலை காணப்படும்.
- வறுமை காரணமாக பாடசாலை இடை விலகல் காணப்படும் குடும்பங்களில் உள்ள மாணவர்கள் வறுமை நிலையிலிருந்து வெளிக் கொண்டு வந்து கல்வியில் முன்னேற்றம் அடைய முடியும்.
பம்பைமடு பிரதேச மக்களினது நீண்ட கால வேண்டுகோளாக தங்களது பிரதேசத்தில் நெல்லிணை உலர வைப்பதற்கு ஒரு தளத்தினை அமைத்து தருமாறு கேட்கப்பட்டிருந்த போதும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. ஆறு வருடங்களுக்கு முன்னால் அமைக்கப்பட்ட சிறு நெற்களத்தின் மூலம் அங்கு வாழுகின்ற மக்கள் தவணை முறையில் நெல்லினை உலர்த்தி வருகின்றனர் இருப்பினும் அந்த தளமானது மக்களின் தேவையை முற்றுமுழுதாக பூர்த்தி செய்வதற்கு போதாமையாக உள்ளது அங்கு வாழும் மக்கள் நெல்லிக்கனி காய வைப்பதற்காக நீண்ட தூரம் சென்று உலர்த்த வேண்டிய தேவை உள்ளது அல்லது நெல்லினை பச்சையாக சந்தை படுத்த வேண்டிய நிலைக்கே தள்ளப்படுகின்றனர் எனவே இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. எனவே அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு அந்த மக்களினுடைய வேண்டுகோளை நிறைவேற்றி வைப்பதன் மூலம் அவர்களினுடைய வாழ்வாதார நடவடிக்கைகள் மாற்றமடைவதோடு வறுமை குறைந்து பாடசாலை இடைவிலகல் குறைக்கப்படும்.