இதழ் 59

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பது டெஸ்ட் அந்தஸ்து உள்ள சிறந்த ஒன்பது அணிகள் தலா ஆறு தொடரில் இரு வருடங்களுக்கு விளையாடி இரு வருடங்கள் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டியில் பலப் பரீட்சை நடத்துவர். கடந்த 2019 இல் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இதன் முதலாவது சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டி 2021 இல் இங்கிலாந்தில் நடைபெற்றது. இந்த இறுதி போட்டியில் இந்தியாவினை வீழ்த்தி நியூஸிலாந்து வெற்றியாளரானது. இதன் இரெண்டாவது சாம்பியன்ஷிப் தொடர்கள் நிறைவுற்ற நிலையில் இதன் இறுதி போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தேர்வாகியுள்ளனர். இந்தப் போட்டி ஜூன் 7 – 11 ம் திகதிகளில் இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இரு அணிகளும் தமது அணிகளை அறிவித்துள்ளனர். அவை வருமாறு:
ஆஸ்திரேலிய அணி – பேட் கும்மின்ஸ் (c), ஸ்காட் போலண்ட், அலெஸ் காரே (wk), கேமரூன் கிறீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹஸல்ட்வூட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லீஸ் (wk), உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சனே, நாதன் லியொன், மிட்செல் மார்ஷ், டாட் மர்பி, மத்தியூ ரென்ஷாவ், ஸ்டீவ் ஸ்மித் (vc), மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்;

இந்திய அணி – ரோஹித் சர்மா (c), ஸுபிமன் கில், செடேஸ்வர் புஜாரா, விராட் கோஹ்லி, அஜிங்க்ய ரஹானே, KL ராகுல், KS பாரத் (wk), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சார் படேல், ஷர்டுல் தாகூர், முஹம்மத் ஷமி, முகமத் சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனட்கட்.

ஆஸ்திரேலியா 17 பேர் கொண்ட அணியினை இங்கிலாந்துடனான ஆஷஸ் தொடருக்கும் சேர்த்து அறிவித்து இருப்பதால் மே 28 ம் திகதிக்கு முன்னர் தமது 15 பேர் கொண்ட அணியை உறுதி செய்ய வேண்டும். இந்தியா தனது 15 பேர் கொண்ட அணியையே அறிவித்துள்ளது.

எதிர்பார்க்கப் படும் பதினொருவர் அணி வருமாறு:
ஆஸ்திரேலியா – டேவிட் வார்னர், உஷ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சனே, ஸ்டீவ் ஸ்மித் (vc), டிராவிஸ் ஹெட், அலெஸ் காரே (wk), கேமரூன் கிறீன், மிட்செல் ஸ்டார்க், பேட் கும்மின்ஸ் (c), ஜோஷ் ஹஸல்ட்வூட், நாதன் லியொன்;

இந்தியா – ரோஹித் சர்மா (c), ஸுபிமன் கில், செடேஸ்வர் புஜாரா, விராட் கோஹ்லி, அஜிங்க்ய ரஹானே, KL ராகுல் (wk), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முஹம்மத் ஷமி, முகமத் சிராஜ், உமேஷ் யாதவ்.

லண்டன் ஓவல் மைதானத்தில் இதுவரை, ஆஸ்திரேலியா 38 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 7 வெற்றி மற்றும் 17 தோல்விகளையும் 14 வெற்றி/தோல்வி அற்ற நிலையையும் பெற்றுள்ள போது இந்தியா 14 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2 வெற்றி மற்றும் 5 தோல்விகளையும் 7 வெற்றி/தோல்வி அற்ற நிலையையும் பெற்றுள்ளது. இரு அணிகளும் பெரிதாக ஆதிக்கம் செலுத்தவில்லை. கடந்த 10 வருடங்களுக்கு பார்த்தால் ஆஸ்திரேலியா சற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது (ஆஸ்திரேலியா – 6 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3 வெற்றி, 2 தோல்வி, மற்றும் 1 ட்ராவ்; இந்தியா – 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1 வெற்றி மற்றும் 3 தோல்வி)

Related posts

சித்திராங்கதா -56

Thumi202121

வெந்து தணிந்தது நாடு

Thumi202121

பாட்டுப் பாடவா?

Thumi202121

Leave a Comment