இதழ் 61

மாணவர் மத்தியில் கொரோனாவின் தாக்கம் -05

கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்கள் மத்தியிலான கொரோனா பற்றிய அறிவு பற்றிய ஆய்வில் கொரோனா வைரஸ் தொற்றுடைய ஒருவரின் உடல் வெப்பநிலை குறித்து கேட்டறிந்த போது பின்வரும் தெரிவுகளை மேற்கொண்டிருந்தனர். இதனைப் பண்புசார் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

‘எங்களுக்கு இது குறித்த விளக்கம் இருந்தாலும் பள்ளிக்கூடம் வரேக்கயும் வேற இடத்துக்கு போகோணும் எண்டாலும் முகக் கவசம் ஒரு நாளைக்கு ஒண்டு இல்ல ரெண்டு வேணும். ஒரு நாள் ரெண்டு நாள் எண்டா பறவாயில்ல. ஒவரு நாளும் முகக் கவசத்துக்கு எங்க போறது. எங்கட அப்பா கூலி வேலைக்கு போறவர். வீட்ட இருக்குற சிலவுகளுக்கே காசு இல்ல. இதுல மாஸ்க் வாங்குறேக்கு என்ன செய்யுற” என்று கூறினார். (விடய ஆய்வு- 02)

வைரஸ் அதிகளவு உயிருடன் வாழுகின்ற இடங்கள், அதிகளவு பாதுகாப்பினை வழங்குளின்ற N95, FFP2 வடிகட்டி முகமூடிகளின் கால அளவு, கொரோனா வைரஸ் தொற்றுக்கான காரணி, கொரோனா வைரஸில் உள்ள மரபணுப் பொருட்களின் வகை, கொரோனா வைரஸ் இனைக் கண்டறியும் செயன்முறை, நோய் தொற்று ஏற்படும் முக்கிய வழி என்பவற்றை அடியாகக் கொண்டு கொரோனா வைரஸ் பரவல் குறித்த மாணவர்களின் அறிவு நிலை ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.

14.9% ஆனவர்கள நீர் மேற்பரப்புகளில்; வைரஸ் அதிகளவு உயிருடன் வாழுகின்றது என குறிப்பிட்டுள்ளதுடன் 57.4% ஆடை மேற்பரப்புகளில் வைரஸ் உயிருடன் வாழ்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதன் படி பார்க்கின்ற போது கொரோ வைரஸ் உயிருடன் வாழும் இடம் குறித்த தெளிவினை 14.9% ஆனவர்கள் அறிந்திருக்கவில்லை.
அதே போன்று கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு முகக் கவசம் குறித்த தெளிவு அவசியம் என்ற அடிப்படையில் முகமூடிகளின் கால அளவு குறித்த மாணவர்களின் தெரிவில் 52.5 % ஆனவர்கள் மட்டுமே N95, FFP2 வடிகட்டி முககவசங்கள் எட்டு மணி நேரம் என்ற தெளிவினை பெற்றிருக்கின்றனர். ஏனையவர்கள் அது குறித்த பூரண அறிவினைக் கொண்டிருக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் கொரோனா வைரஸ் குறித்தும் அதன் பரவல் மற்றும் முகக் கவசங்கள் குறித்தும் மாணவர்களின் பெற்றோர்கள் பூரண அறிவினை பெற்றிராமையும் அவர்களிற்கு அது குறித்த விழிப்புணவர்வுகள் வழங்கப்படாமையுமே காரணமாகக் காணப்படுகின்றது. இதனைப் பண்புசார் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

‘ஆரம்பத்தில் கொரோனா தொடர்பாக எந்தவொரு விழிப்புணர்வும் இல்லாததால் நாங்கள் பாடசாலைக்குச் சென்றாலும் அது தொடர்பான விழிப்புணர்வும் எமக்கில்லை. இப்போது உலக சுகாதார ஸ்தாபனத்தால் பல்வேறுபட்ட சுகாதார விழிப்பணர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றது. இதனால் தற்போது அது தொடர்பாக அறிந்து கொள்ளக் கூடியதா இருக்குது. எங்கட பெற்றோருக்கும் அது தொடர்பான சரியான விழிப்புணர்வு கிடைக்கேல” என கூறுகின்றார். (விடய ஆய்வு-01)

இவர்களில் 52.5% ஆனவர்கள் N95, FFP2 வடிகட்டி முகமூடிகளின் கால அளவு குறித்த சரியான விளக்கத்தை கொண்டவர்களாக காணப்படுகின்றனர். .இவர்களில் முககவசம் குறித்த விளக்கத்தை கொண்டிருப்பினும் அவர்களின் பொருளாதார நிலை வீட்டு சூழல் காரணமாக ஒரு முறை அணிந்த முகக் கவசத்தினை மீண்டும் மீண்டும் பாவிக்கின்ற நிலை காணப்படுகின்றது. இதனைப் பண்புசார் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. ஆய்வுக்குட்படுத்தபட்டவர்களில் 33.7% ஆன மாணவர்கள் முகக் கவசங்களை கிருமி நீக்கம் செய்து மறு பயன்பாட்டிஙற்கு பயன்படுத்த முடியும் என கூறியிருக்கின்றனர். இதனைப் பண்புசார் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

‘நாளாந்த கூலி வேலையினைச் செய்கின்ற குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் சரியான முறையில சுகாதார விதிமுறைகளினைப் பின்பற்ற முடியாத நிலை காணப்படுகின்றது. ஒரு நாள் முகமூடியினைப் பாவிக்கும் போது கூட குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதாவது குறிப்பிட்ட மணித்தியாலத்திற்கு பின்னர் கூட மாற்றுவதற்கான வசதியற்ற நிலை காணப்படுகின்றது. நாங்க பாடசாலைக்க போறோம் எண்டுறத்துக்காக எங்கட பெற்றோர் துணியால செய்யப்பட்ட முகமூடியினைக்கூட போட்டுப் கொண்டு வேலைக்குப் போற நிலை காணப்படுகின்றது. இதால அதிகளவிலான சன நடமாட்டம் உள்ள இடங்களிற்கு போறத்துக்குக் கூட சரியான வழிமுறைகளினைப் பின்பற்ற முடியாத நிலை காணப்படுகின்றது.” (விடய ஆய்வு-04)

இவர்களில் சிலர் தம் உடல்நிலை காரணமாக முகமூடிகளை அணிவதில் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 100% ஆனவர்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கான காரணி வைரஸ் என்பது குறித்த தெளிவினை உடையவர்களாக காணப்படுவதுடன் இவர்களில் 80% ஆனவர்கள் கொரோனா வைரஸில் அடங்கியிக்கும் மரபணுப் பொருட்களின் வகை DNA எனவும் ஏனைய 20% ஆனவர்கள் அது குறித்து தெரியவில்லை எனவும் கூறியிருக்கின்றனர். இதன்படி மாணவர்கள் கொரோனா வைரஸ் குறித்த அறிவினை கொண்டிருந்தாலும் அவர்களினால் சுகாதார நடைமுறைகளை சரிவர பின்னபற்ற முடிவதில்லை. அத்துடன் உள ரீதியாக மாணவர்கள் கொண்டிருக்கும் எண்ணப்பாங்குகளும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் இருப்பதற்கு காரணமாக அமைகின்றது. இதனைப் பண்புசார் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

‘இதனைவிட இன்று வெளியில் செல்லும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக மாறிவிட்டது. எனக்கு இயல்பிலேயே தடிமல், சளி இலகுவில் பற்றிவிடும். எனவே நான் அடிக்கடி சுவாசநோயால் பாதிக்கப்படுவது உண்டு. இன்று இந்த முகக்கவசமானது அணிவது எனக்கு சுவாசக் கோளாறை ஏற்படுத்துகின்றது. அதிகமான நேரம் என்னால் முகக் கவசத்தை அணியமுடியாத நிலையுள்ளது.” (விடய ஆய்வு -05)

மாணவர்களிடம் கொரோனா வைரஸ் தொற்று குறித்த உளப்பாங்கினை ஆய்வுக்குட்படுத்திய போது அவர்களில் தனிமைப்படுத்தல் நடவடிக்கை மூலமாக கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்க முடியும் என 100% ஆனவர்கள் கூறியிருப்பினும் இவர்களில் 89.1% ஆனவர்களே தன்னார்வ சோதனையை செய்து கொள்வதில் தயாராக இருக்கின்றனர்.

மாணவர்களின் உளப்பாங்கு குறித்து மாணவர்களிடம் வினாவிய போது வலுவான உடல் நிலை என்பது கொரோனா தொற்றில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் என்பதில் 30.7% ஆனவர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டிருப்பதுடன் 38.6% ஆனவர்கள் ஏற்றுக்கொள்வதாகவும் கூறியிருக்கின்றனர். இவர்களில் 14.9%ஆன மாணவர்கள் மட்டுமே முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் 7.9% ஆனவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் பதிலளித்திருக்கக் காணலாம்.

மாணவர்களின் உளப்பாங்கு குறித்து மாணவர்களிடம் வினாவிய போது கைகளைக் கழுவும் போது வாசனைத் திரவியங்களையும் சவர்க்காரங்களினையும் போட்டுக் கழுவுதல் தொடர்பாக 51.5% ஆன மாணவர்கள் ஏற்றுக் கொள்வதுடன் 03% ஆன மாணவர்கள் தமக்குத் தெரியாது எனவும் பதிலளித்து இருக்கிறார்கள். அத்துடன் 9.9% ஆன மாணவர்கள் முழுமையாக இக் கருத்தினை ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மாணவர்களின் நடத்தை ஆய்வுக்குட்படுத்தபட்ட போது கொரோனா கால சூழலிலும் 58.4% ஆனவர்கள் நெரிசலான இடங்களிற்கு சென்றிருப்பதுடன் அவர்களில் 97%ஆனவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது முகமூடி அணிந்தே செல்கின்றனர். இவர்களில் மிகவும் குறைந்தளவானவர்களே முகமூடி அணியாது வெளி இடங்களுக்கு செல்வதாக கூறியிருக்கின்றனர்.

ஆராய்வோம்…

Related posts

விழித்தவரெல்லாம் பிழைத்துக் கொள்வர்

Thumi202121

பாடசாலைகளில் விழுமியக் கல்வியின் முக்கியத்துவம்

Thumi202121

இலங்கை செய்திகள்

Thumi202121

Leave a Comment