இதழ் 62

சின்னத்திரையால் சீரழியும் பெண்கள்

தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் அல்லது சின்னத்திரை என்பது இலங்கை, இந்தியா ,சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களால் தயாரித்து ஒளிபரப்பு செய்யப்படும் ஒரு பொழுதுபோக்கு அம்சமாகும். குறிப்பாக பெரும்பாலான சின்னத்திரை நாடகங்கள் இந்தியாவினால் தயாரிக்கப்பட்டு இலங்கை,சிங்கப்பூர், மலேசியா, கனடா, அவுஸ்ரேலியா போன்ற தமிழ் மக்கள் வாழும் நாடுகளை பொழுதுபோக்கு நோக்கம் கருதி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.பெரும்பாலான சின்னத்திரை தொடர்கள் தமிழ்மொழி சார்ந்த கதைக்களத்துடன் தயார் செய்யப்படுவதே இதற்கான காரணமாக அமைகின்றது.

அதேவேளை இவ்வாறான நாடகங்களில் குடும்ப வாழ்க்கை, நகைச்சுவை, காதல், திகில், பக்தி, வரலாறு, மர்மம், பகை போன்ற உணர்வுகளை தூண்டி விடுவனவாகவே அமைக்கப்படுகின்றன. இவ்வாறான நாடகங்கள் பெரும்பாலும் வீட்டில் இருக்கும் பெண்களை இலக்கு வைத்தே ஒளிபரப்பு செய்யப்படுவதை அவதானிக்கமுடிகின்றது.

அந்த வகையில் தமது வீட்டுப்பணிகளை முடிந்த பின்பு ஆறுதலாக இருந்து தொலைக்காட்சி நெடுந்தொடர்களை பார்ப்பதற்கு ஆரம்பிக்கும் பெண்கள் நாட்கள் நகர இந்த நெடுந்தொடர்களுக்குள் மூழ்கிவிடுகின்றனர். இவ்வாறாக சின்னத்திரை அவர்களின் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிடுகின்றது. மாலை 6:00 மணிக்கு நாடகங்களை பார்க்க ஆரம்பிக்கும் பெண்கள் இரவு 10:00 மணிவரை தொலைக்காட்சிக்கு திரைகளுக்குள் மூழ்கி விடுகின்றனர்.
அவர்களின் மொழிநடை, செயல்கள் , வாழ்க்கைமுறை, விழாக்கள் , கொண்டாட்டமுறை போன்ற எல்லாவற்றிலும் சின்னத்திரை மெதுமெதுவாக ஆக்கிரமிப்பு செய்து விடுவதாக மாறிவிடுகின்றது.

மாலை வேளைகளில் சரியாகவே அந்த நேரத்திற்கு தொலைக்காட்சி பெட்டிற்கு முன் அமரும் நெடுந்தொடர் இரசிகர்கள் பிள்ளைகளை , கணவனை, இராவுணவுகள் போன்றவற்றை மறந்து தொடர்களுக்குள் தம்மை தொலைத்து விடுகின்றனர். இவ்வாறாக தமது பயனுள்ள மணித்துளிகளை சின்னத்திரையில் செலவிடும் பென்களை நாம் அன்றாடம் கடந்து கொண்டே செல்கின்றோம்.

பொதுவாகவே பெண்கள் என்றால் இரக்ககுணம் கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர் . ஆனால் இந்த மெகாத்தொடர்கள் அந்த நிலைகளை கொஞ்சம் கொஞ்சமாக கழைந்து அவர்களை எதிரிகளாகவும், பகைமை குணம் கொண்டவர்களாக சித்தரித்து வருகின்றமையை அவதானக்க முடிகின்றது.

இதனால் நெடுந்தொடர்களை பார்ந்து முடித்தபின்பு அவர்கள் எவ்வாறு மற்றைய குடும்பத்தை பிரிப்பது மாமியாருக்கும், மருமகளுக்கும் எவ்வாறு பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுவது என்ற எண்ணத்துடன் தமது சிந்தனைகளை மழுங்கடிக்கும் பெண்களே அதிகம் காணப்படுகின்றனர். இவ்வாறாக நான் ஒட்டுமொத்தமான பெண்கள் அனைவரையும் கூறிவிடவில்லை , சின்னத்திரையே உண்மை என்று சீரழியும் பெண்னைத்தான் கூறுகின்றேன்.

எவ்வாறு அடுத்தவர்களை வீழ்த்துவது, மனைவிக்கு துரோகம் செய்வது, பெற்றோரை ஏமாற்றுவது போன்ற எதிர்மறையான காட்சிகளையே இவை ஒளிபரப்பு செய்கின்றன. அந்தவகையில் குறிப்பாக பெண்களை வில்லிகளாக திரிவுபடுத்தி, பெண்களுக்கு பெண்களையே எதிரிகளாக சித்தரித்து, ஒற்றுமையாக இருக்கும் குடும்பங்களை பிரிப்பது எவ்வாறு ,தாயிடம் இருந்து மகனை எவ்வாறு பிரிப்பது, மாமியார் மருமகள் பிரச்சனை ,கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சனைகளை எவ்வாறு ஏற்படுத்துவது என்ற காட்சிகளை திட்டமிட்டே நாடகங்கள் ஒளிபரப்பு செய்வதன் ஊடாக எம்முடைய சமூகத்தில் பல முரண்பாடுகள் ஏற்பட இவை காரணமாக அமைகின்றன.

அது மட்டுமன்றி திருமண உறவிற்கு அப்பாலான உறவு நிலைகளை எவ்வாறு பேணுவது, இரட்டை அர்த்தம் தரும் வார்த்தைகளை பயன்படுத்துவது போன்ற வாழ்வியலுக்கு ஒவ்வாத செயல்களை வெளிப்படையாக இவை காட்சிப்படுத்துகின்றன. இவ்வாறாக இவை பல குடும்பங்களை சீரழிக்கும் காரணியாக அமைந்துவிடுகின்றது.

தொடர்பாடல் கோட்பாடுகளில் ஊசி வழிக் கோட்பாடு கூறுவதைப்போல வெகுசன ஊடகங்களை பார்வையிடும் நபர்கள் அவற்றின் கருத்தியல்கள், பார்வைகளுக்கு ஆளாகின்ற செயற்பாடுகள் இங்குக் கட்டமைக்கப்படுகின்றன.

நெடுந்தொடர்களுக்குள் இவ்வாறு பூரணமாக மூழ்கிவிடாமல் மாலைப் பொழுதுகளை ஆக்க பூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடலாம். உடற்பயிற்ச்சிகளை மேற்க்கொள்ளுதல், குடும்பமாக பூங்காக்களிற்கு செல்லுதல், பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளில் துணைபுரிதல், ருசியான சத்தான உணவுகளை தயாரித்து பரிமாறுதல் போன்ற பல்வேறு வழிகளில் செலவிடலாம்.

துப்பாக்கி சன்னக்கோட்பாடு குறிப்பிடுவதைப்போன்று எமக்கு கிடைக்கும் ஊடக தகவல்களை ஊடக வெளிச்சத்துடன் நுகர்ந்து அவற்றில் காணப்படும் நிகழ்ச்சி நிரல்களிளை சரியான முறையில் அணுக எம்மை நாம் பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும். சின்னத்திரையினால் ஏற்படும் பல பிரச்சனைகளில் இருந்து எம்மையும், எமது குடும்பங்களை பாதுகாக்க நிஜவாழ்க்கைக்கும் சின்னத்திரைக்கும் இடையில் காணப்படும் இடைவெளிகளை சரியாக தெரிந்து அதன்படி சமயோகிதத்துடன் சிந்தித்து செயற்படபழகிக்கொள்வோம்.

Related posts

யாழில் ஒட்டப்பட்ட விசித்திரமான சுவரொட்டி.

Thumi202121

இலங்கை செய்திகள்

Thumi202121

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களது உள நன்நிலை

Thumi202121

Leave a Comment