இதழ் 68

சாதனை வீரன் சமார் ஜோசப்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் முன்னைய நாள் (போட்டியின் 4ம் நாள்) மிட்சேல் ஸ்டார்க் வீசிய யோக்கர் பந்தினால் வலது காலில் உபாதைக்கு உள்ளாகி இருந்தார், மேற்கிந்தியத் தீவுகளின் புது வரவான சமார் ஜோசப். வலி நிவாரணிகள் எடுத்து, முழுமையாக குணம் அடையாமல் இருந்தாலும், அடுத்த நாள் (போட்டியின் 5ம் நாள்) மிக அவதானமாக பந்து வீச தயாராகினார்.

இது ஜோசப்பின் இரண்டாவது போட்டி. அடிலெய்ட்டில் நடந்த முதல் போட்டியில் தனது டெஸ்ட் அறிமுகத்தின் முதல் பந்திலேயே ஸ்டீவன் ஸ்மித் தினை ஆட்டமிழக்க செய்தது மட்டுமல்லாமல் தன் துடுப்பாட்டத்தையும் ஆஸி வீரர்களுக்கு காட்டியிருந்தார். இருப்பினும் அந்த போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் தோற்றது.

ஆனால் இந்த போட்டியில், ஏழு இலக்குகள் 68 ஓட்டங்களுக்கு என்ற பந்து வீச்சுப் பெறுதி மூலம் மேற்கிந்தியத் தீவுகளை எட்டு ஓட்டங்களால் வெற்றி பெற செய்தார். தனியொருவனாக இந்த போட்டியின் போக்கையே மாற்றி, தன் பெயரை டெஸ்ட் கிரிக்கெட்டில் பதித்தார். இது மேற்கிந்தியத் தீவுகள் அவுஸ்திரேலியாவில் 27 வருடங்களுக்கு பின்னர் பெறும் முதல் டெஸ்ட் வெற்றியாகும்.

இவ்வாறானாதொரு திறமையை அவுஸ்திரேலிய மண்ணில் வெளிப்படுத்திய மேற்கிந்தியத் தீவுகளின் வீரர் என்று பார்த்தால்; 1993 இல் கேட்லி அம்புரோஸ், அலன் போர்டர் தலைமையான ஆஸிக்கெதிராக எடுத்த ஒரு ஓட்டத்திற்கு ஏழு இலக்குகள் என்ற பெறுதியே கூறமுடியும். இப்பெறுதியை எடுக்கும் போது அம்புரோஸ் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட கிரிக்கெட் ஜாம்பவான், ஆனால் ஜோசப் இப்போது தான் தன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றை எழுத தொடங்கியுள்ளார்.

ஜோசப், தனது இரண்டாவது பந்து பரிமாற்றத்தின் ஐந்தாவது பந்தை வீசும் போது ஆஸி 113 ஓட்டங்களுக்கு இரு இலக்குகளை மாத்திரம் இழந்து வெறுமனே 103 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் தனது அடுத்த வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

24 வயதான ஜோசப், ஐந்து வருடங்களுக்கு முன்பு ஹயானாவின் 350 பேர் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் (ஆபிரிக்க அகதிகள் முகாமில்) வாழ்ந்து வந்தார். இடைநிலை பாடசாலைகளே இல்லாத நிலையில் அங்கு கிடைக்கும் பழங்களை கொண்டு பந்து வீசியும் கயிற்றில் கட்டிய பந்தை துடுப்பால் அடித்து தன் கிரிக்கெட் தாகத்தை தீர்த்துக் கொண்டார். 2018 இல் தான் தொலைத்தொடர்பும் வலையமைப்பும் இந்து பிரதேசத்திற்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிருந்து நியூ ஆம்ஸ்டர்டாம்க்கு குடியேறிய ஜோசப், காவலாளியாக 12 மணிநேரம் பணிபுரிந்தார். கடந்த 2023 இல் கரிபியன் பிரிமியர் லீக்கில் அறிமுகமாகி, 2023 இன் இறுதியில் மேற்கிந்தியத் தீவுகளின் ஏ அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்.

இது பாரகராவில் இருந்து புறப்பட்ட சாமர் ஜோசப்பின் நேரம். வருங்காலத்தில் இந்த போட்டி, சாமர் ஜோசப்பின் போட்டியாகவே பேசப்படும்.

Related posts

என் கால்கள் வழியே..

Thumi202121

வெள்ளம் வருமுன் தான் அணை கட்ட வேண்டும்

Thumi202121

தற்கொலைகளால்தடமழியும்தலைமுறைகள் – 05

Thumi202121

Leave a Comment