உதாரணமாக, ஒரு பிடியெடுப்பை தவறவிடுவது மோசமானது எனினும், உலகக் கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் முகமது சிராஜ், செய்தது போல் தொண்டையில் பிடிப்பது இன்னும் மோசமானது. இந்த இலகுவான பிடியெடுப்பை தவறவிட்ட பிறகு பந்துவீச்சாளரைச் சந்திக்க வேண்டிய பயத்தையும், பின்னர் உடைமாற்றும் அறையில் தன்னை நியாயப்படுத்தக் கூட வார்த்தை அவருக்கு இல்லை என்ற கவலையையும் அவரின் முகத்தில் மறைக்க முடியாது.
மறுபுறம், பிடியெடுத்தவர் தான் களத்தில் இல்லை என்பதை பொருட்படுத்தாது, அல்லது அது போட்டியின் முடிவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்ற உணர்வில்லாமல் ஒரு பிடியெடுப்பை பிடித்ததில் மகிழ்ச்சி அடைந்து அதை கொண்டாடுதல் ஆகும்.
மேலும் பிடியெடுப்பின் மறுமுனையில் ஒரு முகமும் உள்ளது, இது ஒரு சிந்தனையற்ற அல்லது தேவையற்ற ஸ்லாக் மூலம் துடுப்பாட்ட வீரர் தன் இன்னிங்ஸ் இடையில் முடிவடைதை பார்ப்பது ஆகும். உ-ம் படத்தில் காட்டப்பட்டது போல் குயின்டன் டி காக், பந்து வீச்சாளர் மீதும், தன் மீதும் வெறுப்பு கொள்ளல்.
சில நேரங்களில் ஒரு பிடியெடுப்புத் தருணம் மனித உணர்ச்சிகளின் முழு வரம்பையும் கொண்டு வருகிறது. கீழே உள்ள ஒரு புகைப்படத்தில் மகிழ்ச்சி, பயம், எதிர்பார்ப்பு, கேளிக்கை – என அனைத்து உணர்வுகளும் உள்ளன.
பிடியெடுக்க முயற்சிக்கும் போது வீரர்களின் தலைகள் மோதிக்கொள்ளுதல். இதனால் பிடியெடுப்பு தவறவிடப்படும் தருணம்.
காகிசோ ரபாடாவை ஸ்டூவர்ட் பிராட் பிடியெடுத்ததைப் போல் செய்யும் பென் ஸ்டோக்ஸ். அதன் போது அவரின் முகம்.
மறுபுறம், கிறிஸ் வோக்ஸ், அவரது ஸ்டீவ் கேரல் தோற்றத்தைக் கொண்டிருப்பதால், அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்த பிறகு, டண்டர் மிஃப்லினில் அவருக்கு வேலை கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
டிராவிஸ் ஹெட் எப்பொழுதும் பிளான் பி வைத்திருப்பார். அவரால் கைகளால் பந்தை பிடிக்க முடியாவிட்டால், தனது வாயால் பிடித்தல். அதுவும் தனது கண்களை மூடிக்கொண்டு பிடியெடுத்தல்.
சிறந்த பிடியெடுப்பு-முகத்திற்கான விருது எப்போதாவது கிடைத்திருந்தால், ரோலோஃப் வான் டெர் மெர்வே நிச்சயம் அதனை வென்றிருப்பார்.
ஒரு பிடியெடுப்பில் பெரும்பாலும் இரண்டில் ஒரு முடிவிற்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆனால் Nat Sciver-Brunt, பந்தை பிடியெடுக்காமல் விடுவதா அல்லது பற்களை இழப்பதா? என்ற துரதிர்ஷ்டவசமான நிலை.