தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், செஞ்சொற்செல்வர். கலாநிதி, ஆறு, திருமுருகன் அவர்களைக் கௌரவித்து பிறந்தநாள் அறநிதியச் சபையை உருவாக்கி, புதியதோர் அறக்கட்டளையை நிறுவியுள்ளது. ஆண்டுதோறும் எம்மண்ணில் இளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஆற்றலாளர் இருவரைத் தெரிவுசெய்து அவர்களுக்கு சிறப்பு விருது வழங்கிக் கௌரவித்தல் எனும் திட்டத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். 2024 ஆண்டுக்கான ஆற்றலாளர் விருது பெறுபவர்களாக பின்வரும் இருவரை அறநிதியச்சபை கூடித் தெரிவு செய்துள்ளனர்.
இருதய சத்திரசிகிச்சை நிபுணர் ஞானச்சந்திரமூர்த்தி காந்திஜி அவர்கள் லங்கா வைத்தியசாலை, கொழும்பு
பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த சாதனையாளர் செல்வன் ஹரிகரன் தன்வந்த் அவர்கள் மாணவன், தி/ஓ.கி.ச.இந்துக் கல்லூரி, திருகோணமலை,
இருதய சத்திரசிகிச்சை நிபுணர். ஞானச்சந்திரமூர்த்தி காந்திஜி அவர்கள்.(Dr. G. Gandhiji MBBS, M.S)
இருதய சத்திரசிகிச்சை நிபுணர் ஞானச்சந்திரமூர்த்தி காந்திஜி அவர்கள், யாழ்ப்பாணம் பண்ணாகத்தைச் சேர்ந்தவர். 17.03.1970இல் பிறந்தார்.
தந்தை
அமரர். திரு. சி. ஞானச்சந்திரமூர்த்தி அவர்கள். (ஓய்வு பெற்ற ஆசிரியர், யா/ஸ்கந்தவரோதயக் கல்லூரி, சுன்னாகம்).
தாயார்
திருமதி. கண்மணி ஞானச்சந்திரமூர்த்தி அவர்கள்,
மனைவி
வைத்திய கலாநிதி. திருசாந்தி காந்திஜி அவர்கள்
மகன்
செல்வன். விதுஷன் காந்திஜி அவர்கள்,
சகோதரி
மகப்பேற்று வைத்திய நிபுணர். திருமதி.ச.பவானி அவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர், (மருத்துவ பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.)
இருதய சத்திரசிகிச்சை நிபுணர் ஞானச்சந்திரமூர்த்தி காந்திஜி அவர்கள், தனது ஆரம்பக் கல்வியை, 1971 1980 வரை (தரம் 01 – 04 வரை) பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலத்திலும் தரம் 05 (1981) யா/விக்ரோறியா கல்லூரி, சுழிபுரத்திலும் தரம் 06 இல் இருந்து க.பொ.த உயர்தரம் வரை (1982-1989) யா/இந்துக் கல்லூரியிலும் கல்வி பயின்றார்.
எமது இளையதலைமுறை ஆற்றலாளர், பேராதனை பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் (1991 -1998) வைத்திய துறைக்கான கற்கை நெறியைப் பூர்த்தி செய்தவர்.
பட்ட மேற்படிப்புகள் விபரம்:
- இருதய சத்திரசிகிச்சை விசேட பயிற்சி(2004-2006 ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பொது வைத்தியசாலை
02.தொடர்ந்து வெளிநாட்டுப் பயிற்சி (2007-2009) Wellington Hospital, Newzeland
கடமையாற்றிய வைத்தியசாலைகள் விபரம் :
2009 2012 :கண்டி போதனா வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை நிபுணராக பணியாற்றியமை.
2013 : இருதய மாற்று சத்திரசிகிச்சை விசேட பயிற்சி.
Heart Transplant Surgery Special Training St. Vincents Hospital, Sydney, Australia.
2014- இன்று வரை: பிரதம இருதய சத்திரசிகிச்சை நிபுணராக, லங்கா வைத்தியசாலை, கொழும்பு Chief Cardiac Surgeon, Lanka Hospital, Colombo.
மருத்துவத் துறையில் இவருடைய பெறுபேறுகள் (Achievements in career) :
7000ற்கு மேற்பட்ட இருதய சத்திரசிகிச்சைகள் (பாரிய,சிக்கலான. அதிக ஆபத்தான) மேற்கொண்டமை. Performed more than 7000 Cardiac operations including major, complex and High risk operations.
இலங்கையில் முதன்முறையாக 2010ஆம் ஆண்டில் கண்டி போதனா வைத்தியசாலையில் மயக்க மருந்து இல்லாமல் நோயாளி நினைவுடன் இருக்கையில் விறைப்பு மருந்து மட்டும் கொடுத்து இருதய சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டமை. தொடர்ந்து இவ்வாறு பல சத்திர சிகிச்சைகள் அவரால் (விறைப்பு மருந்து மட்டும் கொடுத்து ) மேற்கொள்ளப்பட்டது. In 2010 first time in Sri lanka performed heart operation without general anesthesia at Kandy Teaching Hospital.
மரணத்தின் விளிம்பில் இருந்த பல உயிர்களைக் காப்பாற்றிய, இன்னும் காப்பாற்றப் போகும் இருதய சத்திரசிகிச்சை நிபுணர் ஞானச்சந்திரமூர்த்தி காந்திஜி அவர்கள் மேலும் பல சாதனைகளை செய்ய வேண்டும் என வாழ்த்துக்கிறோம்.
இன்றையதினம் செஞ்சொற்செல்வர், கலாநிதி ஆறு திருமுருகள் அவர்களின் 63வது அகவைப் பூர்த்தியில் இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது 2024ஐ இருதய சத்திரசிகிச்சை நிபுணர் ஞானச்சந்திரமூர்த்தி காந்திஜி அவர்களுக்கு வழங்கி கௌரவிப்பதில் பெருமகிழ்வடைகிறோம். இவர் மேன்மேலும் பல விருதுகள் பெற்று சமூகத்திற்கு சேவையாற்ற எல்லாம் வல்ல ஸ்ரீ துர்க்காதேவியை வணங்கி வாழ்த்துகிறோம்.
மற்றைய ஆற்றலாளர் விபரம் அடுத்த துமி மின்னிதழில் வெளியாகும்.