இதழ் 76

ஜஸ்பிரித் பும்ரா கடந்து வந்த கடினமான பாதை

இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சொத்தாகவும் வரமாகவும் பார்க்கப்படும் ஜஸ்பிரித் பும்ரா அவர்களின் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி ஆராய்கிறது துமியின் இந்த மாத கட்டுரை

1993 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் தேதி ஜஸ்பிரித் பும்ரா அகமதாபாத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஜஸ்பீர் சிங் ஓட்டுனராக பணிபுரிந்த நிலையில் எளிமையான குடும்பத்திலேயே வாழ்ந்து வந்தார், இவருக்கு சிறுவயதிலிருந்தே கிரிக்கெட்டின் மீது அதிக அளவு ஆர்வம் இருந்தது, அதன் காரணமாக இளம் ஜஸ்ட் பிரிட்டின் முதல் கிரிக்கெட் முயற்சி சுற்றுப்புறத்தின் குறுகிய பாதைகளில் டென்னிஸ் பந்தில், கல்லில் கிரிக்கெட் விளையாடி வந்தார்.

தனது 5 வயதில் தந்தையை இழந்ததால் அவருடைய வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது அவருடைய குடும்பம் வறுமைக்குச் சென்றது ஆனால் ஜஸ்பிரித் பும்ரா அவரது கிரிக்கெட் கனவை விடவில்லை அவருடைய தாயின் ஊக்குவிப்பால் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த தொடங்கினார், பும்ராவின் கிரிக்கெட் பயணம் தொடக்கத்தில் அகமதாபாத்தில் உள்ள உள்ளூர் கிளப்பானா கிரிக்கெட் கிளப்பில் லெதர் பந்துடன் விளையாடத் தொடங்கினார்.

பும்ராவின் பந்து வீச்சு பாணி ஒரு சிங் ஆசானால் வகைப்படுத்தப்பட்டது, சிறுவயதிலிருந்தே அவரை தனித்துவமானவராக மாற உதவியது, குஜராத்தில் 19 வயதுக்குட்பட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக பும்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார் உள்நாட்டு கிரிக்கெட்டில் திருப்புமுனை ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து 2013 – 14 சீசனில் குஜராத் ரஞ்சி அணிக்காக பும்ரா விளையாடத் தொடங்கி அறிமுகமானார், உள்நாட்டு கிரிக்கெட் அவருடைய நிலையான செயல்பாடுகள் அவருக்கு இந்தியன் பிரீமியர் லீக் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் கிடைத்தது,

மேலும் பும்ரா ஐபிஎல்-லில் நுழைந்து அவருடைய கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார், அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விலைமதிப்பற்ற சொத்தாக மாறினார், அவருடைய திறமைகளை வைத்து அணியின் நம்பகத்தன்மை வாய்ந்த பந்து வீச்சாளராக பும்ரா இருந்தார், ஐபிஎல் இல் பும்ரா வின் சிறப்பான ஆட்டங்கள் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது

2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய தேசிய அணியில் அறிமுகமானார் அப்போது நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 அறிமுகமானார். பும்ரா சர்வதேச கிரிக்கெட்டில் விரைவான வளர்ச்சி அடைந்த நிலையில் அவர் டெஸ்ட் கிரிக்கெட் உட்பட அனைத்து விதமான போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணியில் உறுப்பினர்களில் ஒருவராக மாறினார். இவருடைய தனித்துவமான பந்துவீச்சு பாணி அவரை மற்ற பந்து வீச்சாளர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டியது பும்ராவின் வழக்கத்திற்கு மாறாக அணுகுமுறை அவருக்கு தனித்துவமான நன்மையை கொடுக்கும் வகையில் அமைந்தது.

இந்நிலையில் பும்ரா பிறந்த தருணம் குறித்தும் அவரது வாழ்க்கைப் பயணம் குறித்தும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் பும்ராவின் குடும்ப நண்பரும், பத்திரிகையாளருமான தீபல் திரவதி. இவர் பும்ரா பிறந்தபோது அவரது பக்கத்து வீட்டில் குடியிருந்தவர்.
அதில் “எனக்கு கிரிக்கெட் பற்றியெல்லாம் பெரிதாகத் தெரியாது. விராட் கோலி அனுஷ்காவின் கணவர் என்ற அளவில்தான் என்னுடைய கிரிக்கெட் அறிவு. ஆனால், இந்தப் பதிவு விராட்டைப் பற்றியதல்ல, என்னுடைய ஹீரோ பும்ரா பற்றியது…” என்று நீண்ட பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதில், “1993 டிசம்பரில் எனக்குப் பெரிதாக வருமானமில்லை. மாதம் 800 ரூபாய்தான் எனது சம்பளம். அப்போது எனது பக்கத்து வீட்டுக்காரரும், நண்பருமான தால்ஜித் வீட்டில்தான் நான் எப்போதும் இருப்பேன். எனக்கு அப்போது 22 – 23 வயதிருக்கும். தால்ஜித் (பும்ராவின் அம்மா) பிரசவத்திற்காக அகமதாபாத் மருத்துவமனையிலிருந்தார். அகமதாபாத்தில் இருக்கும் மருத்துவமனையில்தான் எனது அந்த டிசம்பர் மாதம் கழிந்தது. ஒல்லியாக பிங்க் நிறத்தில் பிறந்த குழந்தையாக இருந்த பும்ராவை நான்தான் என் நடுநடுங்கிய கைகளோடு முதன்முதலில் ஏந்தினேன். செவிலியர் ஆண் குழந்தை என்றார்” என்று பும்ராவை முதன்முதலில் கை குழந்தையாகக் கையில் ஏந்திய தருணம் குறித்துப் பதிவிட்டிருக்கிறார்

மேலும், பும்ராவின் வாழ்க்கைப் பயணம் குறித்துப் பேசியவர், “பும்ரா பிறந்த இரண்டு மாதங்களில் என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த சிமன்லால் திடீரெனக் காலமாக, அரசியல் சார்ந்த பிரிவில் ஊடகத்தில் எனக்குப் பதவி உயர்வு கிடைத்து என் வாழ்க்கை மாறியது. நான் கஷ்டப்பட்ட நேரத்தில் எனக்கு எல்லா உதவிகளும் செய்தது பும்ராவின் குடும்பம்தான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பும்ராவிற்கு ஐந்து வயது இருக்கும்போதே அவரது தந்தை ஜாஸ்பிர் சிங் இறந்துவிட்டார். அவரது இறப்பிற்குப் பிறகு பும்ராவின் குடும்பம் வறுமைக்குத் தள்ளப்பட்டது. பும்ரா சிறுவயதில் ஆசையாகக் கேட்கும் பால் பாக்கெட்டை கூட வாங்கிக் கொடுக்க முடியாத நிலை. பும்ராவின் அம்மா குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு நாளைக்கு 16 – 18 மணி நேரமெல்லாம் வேலை செய்தார். மிகுந்த கஷ்டத்தில் இருக்கும் பும்ராவின் அம்மாவை நான் அவ்வப்போது இறுக அணைத்து அறுதல் கூறித் தேற்றுவேன். அதே அறுதலை அவர் இன்றும் எனக்குக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

அப்போது என்னிடம் கொஞ்சம் பணம் இருந்ததால் பும்ரா எட்டு வயதில் ஆசையாகக் கேட்ட ஜாக்கெட் ஒன்றை அவனுக்குப் பரிசாகக் கொடுத்தேன். அப்போது மகிழ்ச்சியிலிருந்த பும்ராவின் முகம் எனக்கு இப்போதும் பசுமையாக நினைவில் இருக்கிறது. பும்ராவின் படிப்புதான் குடும்ப சூழ்நிலையை மாற்றும் என்று எல்லோரும் நம்பினோம். ஆனால், அவனோ பிளாஸ்டிக் பந்தை வைத்து எப்போதும் பொறுப்பில்லாமல் விளையாடிக் கொண்டிருப்பான். இன்றும் அவன் அதே பந்தை வைத்துத்தான் விளையாடிக் கொண்டிருக்கிறான். அதுதான் அவனது வாழ்கையையே மாற்றியிருக்கிறது. இன்று அவன் மிகப்பெரிய லெஜெண்டாகிவிட்டான்.

டி20 உலகக் கோப்பையில் அவனது பந்துவீச்சு அவ்வளவு அற்புதமாக இருந்தது. இந்திய அணியின் வெற்றிக்கு அவனது அந்தப் பந்துவீச்சு மிக முக்கியமானதாக இருந்தது. இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளது அவனது பந்து வீச்சு. பும்ராவை நினைத்து நான் மிகுந்த பெருமை கொள்கிறேன். அவன் இன்றும் மாறாமல் அதே பணிவுடன் அப்படியே இருக்கிறான். அவனிடம் நான் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த நீண்ட பதிவை நான் பதிவிடுவதற்குக் காரணம், ‘எவ்வளவு கஷ்டம் என்றாலும் கடவுள் நம்மை என்றும் கைவிடமாட்டார். நம்பிக்கையை என்றும் இழந்துவிடக் கூடாது’ என்பதை பும்ராவின் வாழ்வு எனக்குக் கற்றுக் கொடுத்திருப்பதைச் சொல்லத்தான்.

பும்ராவைக் கைக்குழந்தையாக என் கைகளில் ஏந்தியபோது நான் பார்த்த அவனது பிரகாசமான அந்தப் பிஞ்சு முகம் என் வாழ்க்கைக்கு அன்று ஒளி தந்தது. எனக்குக் கஷ்டம் வரும்போதெல்லாம் நான் அந்த முகத்தை மனதில் நினைத்துக்கொள்வேன். இப்படிப்பட்ட குழந்தையைத் தனி ஆளாக நின்று வளர்த்த பும்ராவின் அம்மா தல்ஜித்தை எண்ணி வியக்கிறேன்” என்று மிகுந்த நெகிழ்ச்சியுடன் பும்ரா பற்றிப் பதிவிட்டுள்ளார் தீபல் திரவதி.

இந்திய கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்களை மட்டுமே நாயகர்களாக கொண்டாடிய காலத்தில் தன் பந்துவீச்சு திறனால் பல போட்டிகளின் முடிவை இந்திய அணி பக்கம் திருப்பி இந்திய ரசிகர்கள் மனதில் வெற்றி நாயகனாக, இந்திய அணியின் அரும்பெரும் சொத்தாக திகழும் ஜஸ்பிரித் பும்ரா ஏழ்மையில் வளரும் குழந்தைகளுக்கு உதாரண புருஷனாகவும் இருக்கிறார்.

Related posts

ஒன்றுபட்டால்த்தான் உண்டு வாழ்வு

Thumi202121

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம்

Thumi202121

குழந்தைகள் உலகம் எப்போதும் அழகானது

Thumi202121

Leave a Comment