இதழ் 57

வினோத உலகம் – 22

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு மொத்தம் 305  பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக நோபல் நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது. ஆனால் அந்த பட்டியலில் உள்ள பெயர்கள் குறித்து தெரிவிக்கவில்லை.

நோபல் சட்டத்தின்படி, பரிந்துரை செய்யப்பட்டவர்களின் அடையாளம் 50 ஆண்டுகளாக ரகசியமாக வைக்கப்படுகிறது. ஆனால் பரிந்துரைக்க தகுதியுடையவர்கள், தாங்கள் முன்மொழிந்த நபர் அல்லது அமைப்பின் பெயரை வெளியிடலாம்.

இந்த ஆண்டு அமைதிப் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகன், நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் மற்றும் ஒரு சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தை நிறுவ செயல்படும் உக்ரைன் குழுவும் அடங்கும்.

சிறையில் அடைக்கப்பட்ட புடின் எதிர்ப்பாளரும், விஷ தாக்குதலுக்கு ஆளான ஊழல் எதிர்ப்பு ஆர்வலருமான அலெக்ஸி நாவல்னி, பத்திரிகையாளரும் அரசியல் ஆர்வலருமான விளாடிமிர் காரா முர்சா மற்றும் ஜனநாயக ஆதரவு இளைஞர் இயக்கம் வெஸ்னா ஆகியோருக்கும் அமைதிப்பரிசு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும் காலநிலை ஆர்வலர்களான ஸ்வீடனின் கிரேட்டா தன்பெர்க், உகாண்டாவின் வனேசா நகேட், ஈரானிய பெண்கள் உரிமைகள் ஆர்வலர் மசிஹ் அலினெஜாட் மற்றும் அவரது ஹிஜாப் எதிர்ப்பு இயக்கமான மை ஸ்டெல்தி ப்ரீடம், சால்வேஷன் ஆர்மி ஆகிய பெயர்களும் இந்த பட்டியலில் இருக்கும் என நம்பப்படுகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு அதிகபட்சமாக 376 நபர்கள் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். அதை விட இந்த ஆண்டு சற்று குறைவான பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்தும் வகையில் புதுமண தம்பதிகளுக்கு தேனிலவு விடுமுறையை ஒரு மாதமாக அதிகரித்து சில மாகாண அரசுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீன அரசு மேற்கொண்ட கடுமையான நடவடிக்கை காரணமாக அந்நாட்டில் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ஆயிரம் தம்பதிகளில் வெறும் 6.77 பேருக்கு மட்டுமே குழந்தை பிறப்பதாக தெரியவந்தது.

இதையடுத்து திருமணத்தை ஊக்குவிக்கவும், பிறப்பை விகிதத்தை அதிகப்படுத்தவும் கான்சூ, ஷாங்ஸி உள்ளிட்ட மாகாண அரசுகள் அதிரடி முடிவை எடுத்துள்ளன.

உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்டிருந்த சீனாவில், 1980 மற்றும் 2015-க்கு இடையில், மக்கள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையை அமுல்படுத்திய பிறகு சீனாவின் மக்கள்தொகை கணிசமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2022-ம் ஆண்டில், சீனாவில் மிகவும் குறைந்த பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது.

சவுதி அரேபியாவின் புதிய மெகா திட்டம் எம்பயர் எஸ்டேட் கட்டிடத்தை விட 20 மடங்கு பெரிய உட்புற சூப்பர் மெகா நகரத்தை உருவாக்குவது ஆகும். சினிமா பாணியில் ஹாலோகிராபிக் தொழில் நுட்பத்தில் ஆச்சரிய நகரத்தை அமைக்கிறது சவுதி அரேபியா.

புதிய திட்டத்திற்கு முகாப் என பெயரிடப்பட்டு உள்ளது. அரபு மொழியில் கன சதுரம் என்று பொருள்படும் முகாப், 400 மீட்டர் உயரம், 400 மீட்டர் அகலம் மற்றும் 400 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும்,

இது உலகின் மிகப்பெரிய உட்புற நகரமாக இருக்கும். இது அதன் சொந்த உள் போக்குவரத்து அமைப்பைக் கொண்டிருக்கும். விமான நிலையத்திலிருந்து சுமார் 20 நிமிட பயணத்தில் இது இருக்கும். இந்த புதிய நகரம் 104,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், 9,000 ஓட்டல் அறைகள் மற்றும் பிற வசதிகளுடன் அமையும்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் யூ -டியூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக சத்யா நாதெள்ளா ஆகியோர் உள்ள நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் யூ-டியூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவிக்கு தேர்வாகி உள்ளார்.

நீல் மோகன் கடந்த 2008-ல் கூகுளில் சேர்ந்தார். தொடக்கத்தில் இருந்தே கூகுள் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். 2012-ல் இவர் யூ டியூப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து 2015-ல் யூடியூப்பின் தலைமை தயாரிப்பு அதிகாரியானார்.

Related posts

மாணவர் மத்தியில் கொரோனாவின் தாக்கம்

Thumi202121

பரியாரியார் Vs அய்யர் – 06

Thumi202121

ஆரம்பமாகிறது WPL

Thumi202121

Leave a Comment