நியூயார்க் நகரில் குற்றங்களை தடுக்க நவீன வழிமுறைகளை அந்நகர காவல்துறையினர் பின்பற்றி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தற்போது டிஜிடாக்(Digidog) என்ற ரோபோ நாய் ஒன்றை பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். இந்த ரோபோ நாய் ரிமோட் கண்ட்ரோல் முறையில் இயக்கப்படுகிறது. சுரங்க நடைபாதைகள், ஆபத்தான பகுதிகள், கட்டுமானம் நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ரோபோ நாய் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. ஆபத்தில் சிக்கும் மனிதர்களுக்கு உதவி செய்யும் திறன் கொண்ட இந்த ரோபோ நாயிடம் மனிதர்கள் தொடர்பு கொள்ள முடியும். மேலும் தப்பிச் செல்லும் கார்களில் ஜி.பி.எஸ். கருவியை பொருத்தும் எந்திரத்தையும் நியூயார்க் காவல்துறையினர் அறிமுகம் செய்துள்ளனர்.
ஏப்ரல் 22, உலக புவி நாளை பெரு நாட்டு மக்கள் பாரம்பரிய முறைப்படி கொண்டாடினர். இதன் போது புவியின் மாதிரிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பாரம்பரிய வாத்தியங்கள் முழங்க கையில் பாம்பை பிடித்து நடனமாடினர். அத்துடன் இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தினர்.
ஐரோப்பாவில் வெப்பம் காரணமாக 2022 இல் 15,600 பேர் உயிரிழந்துள்ளதாக உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் ஜெயர்மன் மற்றும பிரான்ஸ் இல் 4500 க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகியுள்ளன. கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவு உலக சராசரி வெப்பநிலை கடந்த ஆண்டு பதிவாகியுள்ளது. அத்துடன் கார்பன் டை ஆக்சைட், மெதேன் மற்றும் நைட்டரஸ் ஆக்சைட் ஆகியவற்றின் அளவு தொடர்ச்சியாக அதிகரித்திருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக மக்கள் தொகையில் சீனாவை பின்தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக ஐ நா தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் உலகின் பணக்கார நகரங்களின் பட்டியலில் நியுயோர்க் நகரம் முதலிடத்தை பெற்றுள்ளது. டோக்கியோ, சான் பிரான்ஸிஸ்கோ, லண்டன், சிங்கப்பூர் ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன.
1 comment