தெற்காசியாவின் மிகப்பெரிய “கப்பல் போக்குவரத்து பொருட்களுக்கான வளாகம்” இலங்கையில் அமைக்கப்படவுள்ளது.
இலங்கை அரசின் 15% பங்கூடன் அக்சஸ் நிறுவனத்தின் 15% பங்கு அடங்கலாக சீன நிறுவனம் ஒன்றின் 70% பங்கு முதலீட்டுடன் சுமார் 392மில்லியன் டொலர் பெறுமதியில் குறித்த வளாகம் அமைக்கப்படவுள்ளது.
சுமார் 530,000 கியுபிக் மீட்டர் சரக்கை கையாளும் வகையில் 8 மாடியுடன் குறித்த வளாகம் கொழும்பு துறைமுகத்தில் அமைக்கப்படவுள்ளது.
கப்பல் வலையமைப்பு இணைப்பின் அடிப்படையில் கொழும்பு துறைமுகம் தற்போது உலகின் தலைசிறந்த 13 துறைமுகமாக உள்ளது. சரக்கு கையாளும் திறன் அதிகரிக்கும் பொழுது நாம் மேலும் வலுபெற முடியும்.
இந்தியாவின் மேற்கு கடற்கரை துறைமுகங்களுக்கான சரக்கு பறிமாற்றம் அதிகரிப்பதுடன் பங்களாதேஷ், மியன்மார் நாடுகளின் தேவைகளையும் எம்மால் பெற முடியும். இதனால் பல பில்லியன் ரூபாய் வருட வருமானம் அதிகரிக்கும்.