இதழ் 60

இலங்கை செய்திகள்

டுபாயில் ஒரு கிலோ “இலங்கை பலாப்பழம்” சுமார் 900 ரூபாயிற்கு விற்பனையாகிறது…

யாழ்ப்பாணம், நீர்வேலியில் வாழைநாரில் இருந்து தும்புபிரிதெடுத்து அழகான கைவினைப்பொருட்கள் செய்யப்பட்டு வருகிறது. இது உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்களால் அதிகம் விரும்பப்பட்டு வாங்கிச்செல்கின்றனர்.

இந்த உற்பத்திபொருட்களை சந்தைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மேலும் இவர்களது உற்பத்தியையும் வாழ்வாதாரத்தினையும் மேம்படுத்தமுடியும்.

Jetwing Colombo seven இல் நடைபெற்ற coffee ☕️ திருவிழாவில் பங்குபெற்றிய வள்ளி ப்ரடெக்ட் coffeeகள் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

பல நாடுகளை சேர்ந்த விருந்தினர்களின் கவனத்தை பெற்றதனூடாக ஏற்றுமதி சந்தையினை Valli products நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ளது. யாழில் இருந்து சர்வதேசத்தினரின் நன்மதிப்பை பெற்ற முதன்மை coffeeயாக வள்ளி ப்ரெடக்ட் உற்பத்திகள் அமைந்துள்ளது.

சர்வதேச உற்பத்திகளுக்கு நிகராக Masala coffee, Sukku Malli coffee and cinnamon coffeeகள் உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது..

இலங்கையின் வடக்கில் இருந்து கிரிக்கெட் உலகிற்கு இன்னொரு சிறந்த பந்துவீச்சாளர் உதயமாகிறார்.

முல்லைத்தீவைச் சேர்ந்த கமலராசா இயலரசன் Jaffna Kings – BBK அணி சார்பில் இன்று CDB அணிக்கு எதிராக 9 ஓவர்கள் பந்துவீசி 32 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இவரது விக்கெட்டுக்களில் லசித் குரூஸ்புல்லே, ஓஷத பெர்னாண்டோ, ஷெவொன் டனியல், லஹிரு மதுசங்க, முதித்த லக்‌ஷான் ஆகியோரும் அடங்குவர்.

அவரது பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸின் முகத்தில் தெரியும் பெருமிதம் எங்கள் உள்ளங்களிலும் தெரிகிறது. விரைவில் சர்வதேச அரங்கில் கால்பதித்து மண்ணிற்கும் மக்களுக்கும் பெருமை சேர்க்க துமியின் அன்பு வாழ்த்துக்கள்.

உலகின் தலைசிறந்த 15ஹோட்டல்களில் ஒன்று இலங்கையில் அமைந்துள்ளது..

உலகில் தலைசிறந்த முதல் பதினைந்து Eco-friendly ஹோட்டல்களில் ஒன்றாக Jetwing Vil Uyana ஹோட்டல், Condé Nast Traveller நிறுவனத்தால் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

சிகிரியாவிற்கு மிக அருகில் கிம்பிஸ்ச எனும் இடத்தில் குறித்த ஹோட்டல் ஜெட்விங் நிறுவனத்தினால் 2006ம் நிறுவப்பட்டது.

150க்கும் மேற்பட்ட பறவைகள் 25க்கும் மேற்பட்ட பாலூட்டிகள், ஊர்வண, நீர்வாழ் உயிரனங்கள் என பற்பல ஜீவராசிகளுடன் ஒன்றித்து வாழக்கூடிய வகையில் குறித்த ஹோட்டல் அமையப்பெற்றுள்ளதால் உலகில் தலைசிறந்த முதல் 15 Eco-friendly ஹோட்டல்களில் ஒன்றாக மாறியுள்ளது.

Related posts

அவளும் உழைப்பாளியே

Thumi202121

தமிழ்நாட்டில் இருந்து துமிக்கு அன்பு வாழ்த்து

Thumi202121

வல்வை சிறீ முத்துமாரி அம்மன் ஆலய இந்திரவிழா -2023

Thumi202121

1 comment

Leave a Comment