விழித்தவரெல்லாம் பிழைத்துக் கொள்வர் எனும் செயற்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகளை அபயம்,சிவபூமி, துமி அமைப்புக்கள் இணைந்து நடாத்தி வருகின்றன. இதன் ஒரு அங்கமாக நடைபெற்ற ஓவிய கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில் வழங்கலும், கலைநிகழ்வுகளும் யா/ வட்டு இந்துக் கல்லூரியில் சமூகநெறிக் கழகத்தின் ஊடாக 23.06.2023 நடைபெற்றது.


