இதழ் 66

சிதைக்கப்படும் உயிர்மம்

கரு கர்ப்பப்பைக்கு வெளியே உள்ள பகுதியில் உயிர் வாழ கிடைப்பதற்கு முன்னதாக கருவை நீக்குதல் கருக்கலைப்பு எனப்படும். கருக்கலைப்பானது கருத்தரித்த பெண் விரும்பி செய்து கொள்வது. பாதுகாப்பான முறையில் மருத்துவரின் அறிவுரையோடு செய்து கொள்வதன் மூலம் அப் பெண்ணுக்கு ஆரோக்கிய குறைபாடு நேராமல் பார்த்துகொள்ளலாம். இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் பல பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்வதோடு உடல் ஆரோக்கியத்தையும் இழந்துவிடுவது உண்டு. எல்லா கர்ப்பங்களும் திட்டமிடப்பட்டவை அல்ல. அனைத்து விதமான வயதுகள் மற்றும் பின்னணிகளில் இருந்து வரும் பெண்களுக்கு திட்டமிடப்படாத கர்ப்பம் நிகழ்கிறது. ஆஸ்திரேலியாவில் ஏறக்குறைய பாதி கர்ப்பங்கள் திட்டமிடப்படாதவையாக இருக்கின்றன.

கருக்கலைப்பும் இலங்கை சட்டமும்

கருக்கலைப்பு இலங்கையில் சட்ட விரோத செயலாகும். ஆனால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று மருத்துவரீதியில் பரிந்துரைக்கப்படும் போது அது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதனால் தேவையற்ற கர்ப்பத்தினைத் தடுப்பதற்கு பாதுகாப்பான பாலுறவினை மேற்கொள்வது அவசியமாகும். எவ்வாறாயினும் நீங்கள் தேவையற்ற கர்ப்பம் என்று கருதுகின்றீர்களாயின் தயவு செய்து குடும்பத் திட்ட சங்கத்தினை நாடுங்கள். அவர்கள் ஆலோசனைகளை வழங்கி மாற்று வழிகள் தொடர்பில் வழிகாட்டுவதற்கு எப்பொழுதும் தயாராக உள்ளனர்.

கருக்கலைப்புகான செலவு பின்வருவனவற்றை பொருத்து அமையும்.

  1. கருக்கலைப்பு வகை
  2. உங்கள் கர்பத்தின் நிலை
  3. நீங்கள் கருக்கலைப்பு செய்து கொள்ளும் இடம் (பொது அல்லது தனியார் மருத்துவமனை)
  4. நீங்கள் Medicare க்கு தகுதியுடையவரா என்பது
  5. உங்களிடம் தனிப்பட்ட சுகாதார காப்பீடு இருக்கிறதா என்பது
  6. நீங்கள் ஒரு மருத்துவநிலையத்திற்கு பயணிக்க வேண்டுமா என்பது

கருக்கலைப்பு வகைகள்

கருக்கலைப்பில் இரண்டு வகைகள் உண்டு;.

  1. மருத்துவ கருக்கலைப்பு
  2. அறுவை சிகிச்சை கருக்கலைப்பு

இவ்விரண்டும் பாதுகாப்பானவை மற்றும் செயல் திறன் கொண்டவையாகும்.

கருத்தரித்த பிறகு முதல் இருபது வாரங்களில் இரண்டாவது ட்ரைமெஸ்டரின் இறுதி மாத காலத்துக்குள் கருக்கலைப்பு செய்து கொள்ள வேண்டும். இதிலிருந்து தாமதமாகும் ஒவ்வொரு நாளும் குழந்தையின் வளர்ச்சி வேகமாக இருக்கும். இந்த நேரத்தில் கருக்கலைப்பு செய்தால் அது தாயின் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கிவிடவும் வாய்ப்புண்டு.

கருக்கலைப்புக்கு முதல் 20 வாரங்கள் வரை என்று கூறினாலும் கூட பாதுகாப்பானது என்றால் அது முதல் 12 வாரங்களுக்குள் என்கிறார்கள் மருத்துவர்கள். கருத்தரித்த உடன் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என்று முடிவெடுக்கும் பெண்கள் பலருக்கும் மருத்துவர்களின் அறிவுரை முதல் மூன்று மாத காலங்கள் தான். இவர்களுக்கு அறுவை சிகிச்சை முறையில் இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகள் தரப்படும். சிலருக்கு யோனி வழியாக மருந்துகள் செலுத்துவதுமுண்டு என்றாலும் மாத்திரைகள் வழியாக கருக்கலைப்பு அதிகம் நடைபெறுகிறது. இந்த மாத்திரைகள் உட்கொண்ட 48 மணி நேரத்தில் கரு அழிந்து உதிர போக்கு உண்டாகிறது. பெண்கள் ஆரோக்கியமாக இருந்தால் அவர்கள் மருத்துவரின் அறிவுரையோடு வீட்டிலேயே மாத்திரைகளை எடுத்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பலவீனமான பெண்கள் மருத்துவமனையில் மருத்துவர் கண்காணிப்பில் சிகிச்சை பெறுவது தான் அவசியமாகிறது.

கரு வளர்ந்த பிறகு மாத்திரைகள் வழியாக கருக்கலைவு சாத்தியம் இல்லை என்னும் போது அறுவை சிகிச்சை வழியாக செய்யப்படுகிறது. வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து கொடுத்து கருக்கலைப்பு உறிஞ்சும் கருவியை யோனி வழியாக கர்ப்பபைக்குள் செலுத்தி கர்ப்பப்பையில் இருக்கும் கருவை உறிஞ்சு வெளியே எடுக்கப்படும். இதற்கு பிறகு வலி நிவாரண மாத்திரைகளை வழங்குவார்கள். பிறகு மருத்துவரின் ஆலோசனையோடு மீண்டும் வந்து கர்ப்பப்பை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கருவின் எஞ்சிய பகுதி ஏதேனும் கருப்பையில் இருக்கிறதா என்பதை அறிய பரிசோதனை செய்வார்கள். சட்டபூர்வமாகவும், பாதுகாப்பாகவும் கருக்கலைப்புச் செய்யப்படும்போது, நீண்டகாலத்தில் ஏற்படக்கூடிய மனநல, உடல்நலப் பாதிப்புகள் தவிர்க்கப்படலாம்.

பாதுகாப்பற்ற கருக்கலைப்பு தொடர்பாக விழிப்புணர்வு வழங்கல்.
அடிப்படை மருத்துவ அறிவற்றவர்களால் தரமற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படாமலும் மேற்கொள்ளப்படும் கருவைக் கலைக்கும் செயற்பாடே பாதுகாப்பற்ற கருக்கலைப்பாகும். இது உயிருக்கு ஆபத்தினை விளைவிக்கும் ஓர் செயற்பாடாக உள்ளதுடன் எதிர்காலத்தில் குழந்தை பேற்றுக்கான வாய்ப்பினையும் இது பாதிக்கின்றது.

ஆனால், திறமையற்றவர்களால், சுகாதாரமற்ற சூழலில், அபாயகரமான உபகரணங்கள் பயன்படுத்திப் பாதுகாப்பற்ற முறையில் செய்யப்படும் சட்டபூர்வமற்ற கருக்கலைப்பு நிகழ்வுகளினால், ஆண்டொன்றுக்கு 5 மில்லியன் பெண்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதுடன், 47000 பேர் இறப்புக்கு உள்ளாகின்றனர். எல்லாப் பெண்களுக்கும் பாதுகாப்பான, சட்டபூர்வமான கருக்கலைப்புக்கு அனுமதி கிடைக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்கிறது.

உலக அளவில் ஆண்டு ஒன்றுக்கு நிகழும் சுமார் 56 மில்லியன் கருக்கலைப்புகளில் கிட்டத்தட்ட 45 சதவீதம் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளாகவே இருந்தன. 2003 – 2008 ஆண்டுகளில் இந்த வீதத்தில் பெரிய மாற்றம் எதுவும் நிகழவில்லை. ஆனால் மக்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு மற்றும் கருத்தடை பற்றிய அறிவு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்ததன் விளைவாக அதற்கு முந்திய ஒரு சில பத்தாண்டுகளில் இந்த வீதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. 2008 ஆம் ஆண்டளவில், 40 சதவீதமான பெண்களுக்கு, தமது விருப்பத்திற்கேற்ப, சட்டபூர்வமாக கருக்கலைப்புச் செய்துகொள்வதற்கு கட்டுப்பாடுகள் இருக்கவில்லை. அதேவேளை கருக்கலைப்பை அனுமதிக்கும் நாடுகளில், வெவ்வேறு நாடுகள், பிரசவ காலத்தில் எந்தக் கால எல்லைக்கு முன்னர் கருக்கலைப்பு செய்துகொள்ள வேண்டும் என்பதற்கு வெவ்வேறு கால எல்லைகளைக் கொண்டிருக்கின்றன.

நீங்கள் உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் நன்றாக உணரும் பட்சத்தில் கருக்கலைப்பு செய்த மறுநாளே நீங்கள் இயல்பான செயற்பாடுகளுக்குத் திரும்பலாம். ஆனால் அடுத்த ஓரிரு வாரங்களுக்கு நீங்கள் பின்வருவனவற்றை தவிர்க்க வேண்டும்.
கனமானவற்றை தூக்குதல், உடல் ரீதியான வேலை மற்றும் கடுமையான செயற்பாடுகள், உடலுறவு கொள்ளுதல், மாதவிடாய்க்கான பஞ்சுத்தக்கைகளை (tampons) பயன்படுத்துதல்;, குளியல் தொட்டியில் குளித்தல் அல்லது நீந்திச் செல்லுதல்.

Related posts

சித்திராங்கதா -62

Thumi202121

வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை

Thumi202121

அவனருளாலே அவன்தாள் வணங்கி…!

Thumi202121

Leave a Comment