இதழ் 72

கொக்கோ கோலாவின் கதை

கொக்கோ கோலா மென் பானத்தை கண்டு பிடித்தவர் ஜான் பெம்பெர்டைன் என்ற அமெரிக்கர். ஜான் பெம்பெர்டைன் “மார்பைன்’ என்ற கஞ்சாவைப் போன்ற ஒரு வகை போதைப் பொருளுக்கு அடிமையாக இருந்தார். அப்பழக்கத்தினின்றும் மீள பிரஞ்ச் வைன் கொக்கோ என்ற மாற்று பானத்தை உற்பத்தி செய்து அதற்கு காப்புரிமையும் பெற்று சந்தைப் படுத்தி வியாபாரம் செய்தார். ஆனால் அந்த பானத்துக்கு அமெரிக்காவின் பல மாகாணங்கள் தடை விதித்தன. எனவே அவர் கார்பன் பாய்ச்சப்பட்ட நீரில் (carbonated water) தயாரிக்கப்பட்ட கொக்கோ கோலா என்ற மென் பானத்தை (Soft Drink ) தயாரித்து அதற்கு 1886ம் ஆண்டு மே 8ம் நாள் காப்புரிமை பெற்றார். அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கோக்கோ கோலாவின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்குள்ள ஒரு பாதுகாப்பு பெட்டகத்தில் உச்சகட்ட பாதுகாப்புடன் 130 ஆண்டுகால பழமை வாய்ந்த கோக்கோ கோலாவின் தயாரிப்பு ரகசியம் வைக்கப்பட்டுள்ளது.
விற்பனையில் உலகில் முதலிடத்தில் இருக்கும் இந்த கோக்கோ கோலா பானத்துக்கு உலகம் முழுவதுமே கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. உடல் நலத்துக்கு மிகவும் கெடுதி விளைவிக்கக் கூடியது என்று பல நாடுகளின் தன்னார்வ சுகாதார குழுக்கள் எச்சரிக்கின்றன. இந்த பானத்தின் தயாரிப்பு நிறுவனங்கள் ஏராளமான நீரை விரயம் செய்வதான புகாரும் உள்ளது.

Related posts

சட்ட அமைப்பில் தடயவியல் உளவியலின் முக்கியத்துவம்

Thumi202121

வினோத உலகம் – 35

Thumi202121

கருக்கலைப்பும் அது சார்ந்த கல்வியின் தேவைப்பாடும்

Thumi202121

Leave a Comment