இதழ் 73

வினோத உலகம் – 36

வட கொரியாவிலிருந்து கடந்த 9-ஆம் தேதியன்று இரவில் 300க்கும் அதிகமான பலூன்களில் குப்பைகள் அடங்கிய பைகளை தொங்கவிட்டு, அவற்றை தென் கொரிய எல்லைக்குள் பறக்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மீண்டும் அதேபாணியிலான நடவடிகைகளை வட கொரியா முன்னெடுத்திருப்பதாக தென் கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

வட கொரிய எல்லையில் அதிக சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகள் மூலம் ஒலி மாசுபாட்டை தென் கொரியா ஏற்படுத்தியது. வட கொரியா மீதான உளவியல் ரீதியிலான தாக்குதலாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட, இந்தியா – இலங்கை இடையிலான ராமர் பாலத்தின் படத்தை ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்டது. இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா – இலங்கை இடையே, கடலுக்கடியில் 48 கிலோ மீட்டர் தொலைவுக்கு, இந்தியாவின் தென்கிழக்குத் தீவுப்பகுதியான ராமேஸ்வரம் தீவிலிருந்து, இலங்கையின் மன்னார் தீவுப்பகுதிக்கு இடையே ராமர் பாலம் அமைந்துள்ளது.

இந்த்நிலையில், ராமர் பாலத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் கோப்பர்நிக்கஸ் சென்டினெல் – 2 செயற்கைக்கோள் புகைப்படம் எடுத்து ஆய்வு மையத்துக்கு அனுப்பியிருக்கிறது. இந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்டது.

ராமர் பாலத்தில் இருக்கும் மண் அமைப்புகள் உலர்ந்து காணப்படுகிறது. இங்கு கடலின் ஆழமே ஒன்று முதல் 10 மீட்டர் வரைதான் உள்ளது என ஐரோப்பிய ஏஜென்சி தெரிவித்துள்ளது.

பாலம் எப்படி உருவானது என்பது பற்றி பல கோட்பாடுகள் இருந்தாலும், புவியியல் சான்றுகள்படி இந்த சுண்ணாம்புக் கற்கள் ஒரு காலத்தில் இந்தியாவை இலங்கையுடன் இணைத்த நிலத்தின் எச்சங்கள் என்று புவியியல் சான்றுகள் கூறுகின்றன.

கிரீஸ் நாட்டில்ரு தீவில் விமான நிலையம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வந்தன. அடித்தளம் அமைக்க நிலம் தோண்டப்பட்டபோது, திடீரென பூமியில் அடியில் ஒரு விசித்திரமான ஓர் அமைப்பை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த அமைப்பை ஆராய்ச்சி செய்தபோது, அது 4000 ஆண்டுகள் பழமையான அமைப்பு என்பது தெரியவந்துள்ளது. இது பண்டைய கிரேக்க நாகரீகம் தொடர்பான புதிர்களை தீர்க்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பும் நிலையில், இது எதற்காக பயன்படுத்தப்பட்டது என்பதை தெரியாமல், குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மிகப்பெரிய சக்கரம் போன்று காட்சியளிக்கும் இந்த அமைப்பு கிமு 2000 முதல் 1700 வரை பயன்படுத்தப்பட்ட மினோவான் நாகரீகத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஏனெனில், கிரீட்டில் உள்ள நினைவுச்சின்ன அரண்மனையும் இதே காலகட்டத்தில் கட்டப்பட்டதுதான். எனவே, மினோவான் நாகரீகத்துடன் தொடர்புடைய முன்பு கண்டுபிடிக்கப்பட்ட கட்டமைப்புகளைப் போலவே, இந்த கட்டமைப்பின் செயல்பாடு என்னவாக இருந்திருக்கும் என்பதை விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

ஒரு பெரிய சக்கரம் போல காட்சியளிக்கும் இந்த அமைப்பின் மொத்த பரப்பளவு 19 ஆயிரம் சதுர அடி. கிரேக்க கலாச்சார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த அமைப்பு 157 அடி விட்டம் கொண்டது என்றும், மினோவான் கல்லறைகளைப் போன்று காட்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஏனெனில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த அமைப்புக்கு அருகில் பழங்கால விலங்குகளின் எலும்புகளும், எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எனவே, பண்டைய காலத்தில் இந்த இடத்தில் பல்வேறு விதமான சடங்குகள் செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. எனவே, தற்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த இடத்தை ஆய்வு செய்ய தொடங்கியிருப்பதால், விமான நிலையப் பணிகள் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

யாழ் இந்துக் கல்லூரியில் நடைபெற்றுவரும் தொடர் கருத்தரங்குகள்

Thumi202121

125 ஆவது பிறந்த நாள் காணும் இலக்கிய கலாநிதி. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை

Thumi202121

இயற்கை படைப்பாகிய ஏரிமலைகள் எமக்கு வரமா? சாபமா?

Thumi202121

Leave a Comment