இதழ் 75

வினோத உலகம் – 38

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 90 அடி உயரத்தில் பிரம்மாண்ட அனுமன் சிலை திறக்கப்பட்டுள்ளது. டெக்சாஸின் புதிய அடையாளமாக மாறியுள்ள இந்தச் சிலை அமெரிக்காவின் 3-வது உயரமான சிலை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.

நியூயார்க்கின் 151 அடி உயரமுள்ள சுதந்திர தேவி சிலை அமெரிக்காவின் மிக உயரமான சிலையாகும்.. அடுத்ததாக ஃப்ளோரிடாவில் உள்ள 110 அடி உயரமான டிராகன் சிலை உள்ளது. இந்த பிரம்மாண்ட அனுமன் சிலைக்கு ‘ஒற்றுமையின் சிலை’ ‘Statue of Union’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சுகர் லேண்ட் பகுதியில் உள்ள ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி கோயில் வளாகத்தில் இந்தப் பிரம்மாண்ட அனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது.

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் கடந்த 1984-ம் ஆண்டு வெளியான ‘இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டெம்பிள் ஆப் டூம்” இண்டியானா ஜோன்ஸ் படவரிசையின் முதல் படமாகும். இதில், இண்டியானோ ஜோன்ஸ் கதாபாத்திரத்தில் ஹாரிசன் போர்டு நடித்திருந்த நிலையில், இவர் பயன்படுத்திய தொப்பி 6 இலட்சம் டொலருக்கு கடந்த ஆகஸ்ட் 15 Los Angeles நகரில் ஏலம் போயுள்ளது. Harry Potter, Star Wars போன்ற திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட பொருள்களும் அதேநேரத்தில் ஏலத்தில் விடப்பட்டுள்ளன.

விமான நிலையத்தில் கத்தரிக்கோல் ஒன்று காணாமல் போனதால் விமானங்கள் இரத்து செய்யப்பட்ட சம்பவம் ஒன்று ஜப்பானில் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 17 ஜப்பானில் கொக்கைடோவின் நியூ சிட்டோஸ் விமான நிலையத்தின் உள் நுழையும் வாயிலின் அருகே இருந்த  கடையொன்றில் கத்தரிக்கோல் காணாமல் போனதால் 36 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதோடு, 201 விமான சேவைகள் தாமதமடைந்துள்ளன.

கத்தரிக்கோலை குற்றச் செயல்களுக்காக வேண்டி யாராவது எடுத்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதால் விமான நிலையத்தில் பயணிகள் வருகை தடை செய்யப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டது.

இங்கிலாந்தின் கிழக்கு பகுதியில் உள்ள பென்ஹால் கிரீன் நகரைச் சேர்ந்த மூதாட்டி மானெட் பெய்லி. இவர் தனது 102-வது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாட விரும்பினார்.

அதன்படி சுமாா் 6,900 அடி உயரத்தில் இருந்து அவர் ஸ்கை டைவிங் எனப்படும் வான்சாகசத்தில் ஈடுபட்டார். இதன்மூலம் இவர் நாட்டின் மிக வயதான ஸ்கை டைவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்னதாக 2022-ல் தனது 100-வது பிறந்த நாளின்போது மானெட் 230 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டியது குறிப்பிடத்தக்கது.

Related posts

நல்லைக் குமரன் மலரின் 32 ஆவது இதழ் வெளியிட்டு வைப்பு

Thumi202121

பொன் விழாக்காணும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

Thumi202121

நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்

Thumi202121

Leave a Comment