சித்திராங்கதா – 29
வெள்ளையனும் வன்னியனும் இது உத்தராயண காலமாகையால் வன்னிமண்ணின் கனல் அதியுச்சமாக இருந்தது. அடங்காப்பற்றின் குடியேற்றம் பற்றி நாம் ஏற்கனவே கூறியிருக்கிறோம். பெரும்பாலும் பாரிய மரங்களினால் சூழப்பட்ட வனாந்தர பிரதேசமாகவே காணப்பட்டது. ஆங்காங்கே சில குடியிருப்புக்கள்.